Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, 30 December 2010

உலகின் பலவீனமான நாடு அமெரிக்கா

அணுத் திமிர் காரணமாக உலகை மிரட்டி வரும் அமெரிக்கா இதுவரை கட்டி வைத்திருந்த கற்பனைக் கோட்டை ஒவ்வொன்றாக சரிந்து விழுந்து வருகிறது. தான் என்ன செய்தாலும் உலகில் யாரும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்ற ஆணவத்துக்கு மரண அடிகள் விழுந்து கொண்டே வருகின்றன.

Wednesday, 10 November 2010

காமக் கொடூரனை போட்டுத் தள்ளிய காவல்துறை

இத... இத... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம்!
நவம்பர் 9 அன்று தீபாவளி கொண்டாடிய கோவை மக்கள்!

கோவை சம்பவத்தைப் பற்றி பதிவை போட்டு மூன்று நாள்கள் கூட ஆகவில்லை. கோவை காவல்துறையினர் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

பொது மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து வைத்துள்ளோம். இதுபோல் பள்ளி மாணவர்கள் செல்ல பேருந்து தேவை என்பதையும் கூறி இருந்தோம் அதுவும் உடனே நிறைவேற்றப்பட்டது. ஒருவேளை கருணாநிதி அவர்கள் நமது பிளாக் ஸ்பாட்டை பார்த்து விட்டாரோ என்னவோ?

Saturday, 6 November 2010

பள்ளிக் குழந்தைகள் கடத்தலில் நாம் படிக்க வேண்டிய பாடம்

கடந்த வாரம் தமிழகத்தில் அனைவரின் மனதிலும் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளிச் சிறுவர்கள் கடத்தி கொல் லப்பட்ட செய்தி.  கோவையைச் சேர்ந்த முஸ்கான், ரித்திக் என்ற சகோதர சகோதரிகளை வேன் டிரை வர் ஒருவர் கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்தவுடன் அந்த மாணவர்களை விட்டு விடாமல் கொன்றுபோட்டது

Tuesday, 26 October 2010

சாமியார்களின் தொடரும் காம லீலைகள்

இறைவன் ஆணையும், பெண்ணையும் எதற்காகப் படைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனித அறிவிலிகள் சிலர் ஏற்படுத்திய தேவையில்லாத கலாச்சாரங்கள் மனித இனத்தையே அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

Monday, 25 October 2010

சென்னை 3வது விவாதம்

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கச் வந்தவர் மானத்தை இழந்தார்.
 
சென்னை 3வது விவாதம். 
தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

Sunday, 24 October 2010

பர்தாவை விமர்சித்த பயங்கரவாதி!

சாத்தா குரூசில் ஒரு மாநகராட்சி மருத்துவமனையில் இரண்டு வயது ஆண் குழந்தையை பர்தா அணிந்து ஒரு பெண் கடத்திச் சென்றுவிட்ட காரணத்தால் பர்தா உடை தடை செய்யப்பட வேண்டுமென்று பாசிஸ பால்தாக்கரே தமது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.

மரணங்களைத் தடுக்க இருக்கையை மாற்ற வேண்டும்

காலையில் நாம் வேலைக்கு அறக்கப் பறக்க கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு வருவோம். இந்த முறையாவது பஸ்ஸில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் என்று வீராவேசமாக நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பார்த்தால்தான் தெரியும். 

Friday, 1 October 2010

அரசியல்தனமான தீர்ப்பு!

   ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

Friday, 24 September 2010

கலைஞர் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது ; அம்மா என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும் - இதுவா பகுத்தறிவு

நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகளாகவும், சிந்தனையாளர்களாகவும் அப்பாவி மக்களால் பார்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் சராசரி மனிதனின் அறிவை விட குறைந்த அறிவு படைத்தவர்களாகத்தான் நமது அரசியல்வாதிகள் உள்ளனர்.

Thursday, 23 September 2010

பாடாய் படுத்தும் பன்றிக்காய்ச்சல்

கடந்த ஆண்டு அமெரிக்காவின் மெக்ஸிகோவில் பரவிய பன்றிக்காயச்சல் நோயால் பல ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்தனர். இது தொற்றுநோய் என்பதால் அங்கு வசித்து வந்த உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இந்நோய் பரவியது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா இந்தக் கொடிய உயிர்க்கொல் நோயை பரப்பியது.

கலவரத்தை ஏற்படுத்திய விநாயகர் ஊர்வலம்

     விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா? என்ற கட்டுரை போட்டு ஒரு நாள் கூட ஆக வில்லை. ஒரு செய்தி என் மனைதி வெகுவாக பாதித்தது. அதாவது ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலையைக் கரைக்க ஏரி, குளங்களுக்கு வந்தபோது அதில் மூழ்கி 21 பேர் இறந்துள்ளனர். இது வருந்தத்தக்க ஒன்றாகும்.

Tuesday, 21 September 2010

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா?

இந்தியாவைப் பொறுத்தவரை எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் மதச்சார்பற்ற அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது எந்த ஒரு நபரும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றலாம். வழிபடலாம். எந்த ஒரு நபரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற இந்திய சட்டத்தில் இடமுண்டு.

தாம்பரத்தில் உலவும் பேய் பீதி

சமீபத்தில் சென்னை தாம்பரம் பகுதியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால் தாம்பரம் ரயில்வே ஊழியர்களும், தாம்பரம் பகுதி வாசிகளும் தண்டவாளத்தில் ஒரு பூஜை செய்தனர். இந்த பூஜை எதற்கென்றால் இங்கு ஆவிகள் உலவுவதாகவும், அதனால் பலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் அடிபட்டு இறந்து விடுகின்றனர் என்பதாலும் இந்த பூஜை செய்தால் அங்கு உலவிக் கொண்டிருக்கும் இறந்தவர்களின் ஆவி அந்த இடத்தை விட்டு போய் விடும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டது.

Sunday, 12 September 2010

பிச்சைக்காரர்களின் புகலிடம்


                                                                                             நன்றி : தினகரன் நாளிதழ் 
                                                                                                               

Thursday, 9 September 2010

வீணாகும் உணவு தானியங்கள்

மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
சமீபத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது வீணாகிப் போய்க் கொண்டிருக்கும் உணவு தானியங்கள் விஷயம். மத்திய அரசின் கையிருப்பில் 60 ஆயிரம் டன் உணவு தானியங்கள் (அரிசி, கோதுமை) உள்ளது. அத்தனையும் வீணாகிப் போனாலும் பரவாயில்லை...

Wednesday, 1 September 2010

தீவிரவாதத்தைப் பற்றி பேச இவர்களுக்குத் தகுதியில்லை

உலகில் பரந்து விருந்து கிடக்கும் தீவிரவாதத்திற்கு ஆணி வேரே அமெரிக்காதான் என்று உலக மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படி இருக்க "இரானில் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கப் போகிறேன்; ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்கப் போகிறேன் என்று இந்த அண்ட வந்த பிடாரி (அமெரிக்கா) கொக்கரித்துக் கொண்டிருக்கிறது.
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம் இந்திய திருநாட்டை இவர்கள் ஆட்சி செய்தபோது நம் இந்திய மக்கள் கடுமையாக இவர்களை எதிர் கொண்டனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரும் வெள்ளையனை ஒழிக்க படாத பாடுபட்டனர். இதில் குறிப்பாக முஸ்லிம்களின் பங்கு அதிகமாக இருந்தது.
வ.உ. சிதம்பரனாருக்கு கப்பல் வாங்க அப்போதே ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தவர் பக்கீர் முஹம்மது என்ற முஸ்லிம் ஆவார். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல் நம் இஸ்லாமிய நண்பர்கள் இந்திய சுதந்திரத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளனர்.
உதாரணத்திற்கு நான் ஒன்றைச் சொல்கிறேன் இதை சரியா என்பதை நீங்கள் யோசியுங்கள்.
நீங்கள் ஒரு சொந்த வீட்டில் குடி கொண்டிருக்கிறீர்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் வீட்டை ஆட்டையைப் போட நினைக்கிறான். அவன் உங்களின் நண்பனாக இருந்தாலும் கூட நீங்கள் என்ன செய்வீர்கள். "டாய் இது நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கின வீடு. இதை ஆட்டையைப் போட உனக்கு எப்படிடா மனம் வந்தது...'' என்று நாம் கேட்போம்.
அவன் நம் நண்பனாக இருந்தாலும் கூட நம்முடைய பொருளை நம்மிடம் கேட்காமல் சொந்தம் கொண்டாடினால் அதனை நாம் கண்டிக்கிறோம்.
இப்படி இருக்கும்போது இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒருவன் இந்த நாட்டில் தீவிரவாதம் பெருகிக் கொண்டிருக்கிறது; தீவிரவாதத்தை உடனே ஒழிக்க வேண்டும் என்று டேரா போட்டுக் கொண்டு யாரிடம் வந்து நாட்டாமை செலுத்துவது.
எனவேதான் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய தேசங்கள் சுதந்திர தாகம் கொண்டு அமெரிக்கர்களை எதிர் கொள்கின்றனர்.
ஒருவன் நம்முடைய சொத்தை கொள்ளையடிக்கிறான் என்றால் அதை நாம் காப்பாற்ற போராடுவது தீவிரவாதமா? அப்படியென்றால் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பெருந் தலைவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா? இப்படி நல்லோர்கள் கேட்கின்றனர்.
தன்னுடைய நாடு எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகக் கூடாது என்று அணு ஆயுதங்களையும், நவீன ரக போர்க் கருவிகளையும் வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தீவிரவாத நாடு என்று மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
உலக நாட்டையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணிய அமெரிக்கா உலகில் உள்ள பல நாடுகளின் இராணுவ ரகசியங்களைத் தெரிந்து வைத்துள்ளது. இதனால்தான் நம்முடைய நாட்டிற்கும் அண்டை நாடான சீனா, பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கும் உள்ள எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ தளவாடங்களை நன்கு அறிந்து வைத்துள்ளது.
இதெல்லாம் எதற்காகத் தெரியுமா? (உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் சொல்கிறேன்) இப்படி எல்லைப் பிரச்சினையை அண்டை நாடுகளிடையே கிளப்பி இராணுவ ஆயுதங்களை விற்று அதன் மூலம் வல்லரசு நாடாக தொடர்வதே இதன் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதிதான் சமீபத்தில் இந்தியாவுக்கு அமெரிக்க விடுத்த எச்சரிக்கை மணி, சீனா தன்னுடைய இராணுவத்தை இந்திய எல்லைப் பகுதியை நோக்கி நிலை நிறுத்தியுள்ளது என்று புரளியைக் கிளப்பி இந்திய மக்களின் வயிற்றில் புலியைக் கரைத்தது. இதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவை நோக்கி இராணுவத்தை நிலை நிறுத்தி உள்ளது என்றும் பல எச்சரிக்கை குண்டுகளையும் இந்தியாவின் தலையில் போட்டது.
உடனே நமது பாரதப் பிரதமர், ஒபாமாவின் தலையாட்டி மன்மோகன் சிங்கும் அமெரிக்கா கூறும் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டு சுயமாக யோசிக்காமல் நமது இராணுவ வீரர்களையும் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தத் துவங்கினார்.
ஆக மொத்தத்தில் உலகத்தில் தீவிரவாதத்தை வளர்த்து அதன் மூலம் தன் நாட்டை மிகப் பெரிய வல்லரசாக மாற்ற அமெரிக்க நினைக்கிறது.
அமெரிக்க எதனால் இப்படி செய்கிறது தெரியுமா? கடந்த சில வருடங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் சரிவு நிலையைக் கண்டு வருகிறது. அங்குள்ள ஒவ்வொரு வங்கியும் தினமும் திவால் நோட்டீஸ்களை அள்ளி வழங்கி வருகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக 15 அமெரிக்க வங்கிகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி நடந்து கொண்டிருக்க, "அதெல்லாம் ஒன்றும் இல்லை அமெரிக்கா நல்ல நிலையில்தான் இருக்கிறது...'' என்று புருடா விடுகிறார் அமெரிக்க மக்களால் வெறுக்கப்படும் ஒபாமா.
இராக் 7 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த அமெரிக்கா சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் 50,000 படைகளை அங்கே நிலை நிறுத்தி உள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.
கடந்த வாரம் (19-08-2010) அன்று சில ஆயிரம் இராணுவ வீரர்களை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்ட அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று ஒபாமா கூறினார்.
கிழிச்சாங்க... வீரன் பலபேரை எதிர் கொள்வான். கோழையோ ஒருவனைக் கூட எதிர் கொள்ள முடியாது என்பதற்கு இது நல்ல சான்று. இரான், ஆப்கானிஸ்தான் போராளிகளை எதிர்கொள்ள முடியாமல்தான் இவர்கள் பின்வாங்குவது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அமெரிக்க வீரர்களால் தாக்கு பிடிக்கவே முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த படை வாபஸ்.
சமீபத்தில் விக்கி லீக் என்ற இணைய தளம் ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளில் அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ள இராணுவ ரகசியங்களை வெளியிட்டது. உடனே குய்யோ முறையோ என் கத்திய அமெரிக்கா விக்கி லீக் இணைய தளத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
"போடா வெண்ணை நீ என்னடா சொல்றது... நான் என்னடா செய்யுறது...'' என்று அலட்சியப்படுத்திய விக்கி லீக் இணைய தளம் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களையும், அமெரிக்கா பல்வேறு நாடுகளில் உருவாக்கி உள்ள ஒற்றன் பட்டியலையும், அதன் சூழ்ச்சியையும் வெட்ட வெளிச்சமாக்கியது.
"என்னடா இது... மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம்போல் இருக்கிறதே...'' என்று அமெரிக்கா இப்போது மண்டையையும், கையையும் சொரிந்து கொண்டு என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படித்தானே மற்றவர்களுக்கும் இருந்திருக்கும். "தனக்கு வந்தா அது ஆபத்து; மத்தவனுக்கு வந்தா அது பாதுகாப்பா? என்னங்கடா உங்க நியதி' என்று உலக மக்கள் அமெரிக்காவின் தந்திரங்கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு தீவிரவாதத்தைப் பற்றி பேச துளியும் தகுதியில்லை என்பதை உலக மக்கள் அறிவார்கள்.
உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். எனவேதான் நம் இந்தியா நாட்டிற்கென்று  ஒன்று வந்து விட்டால் வாரிக்கொடுக்கும் வள்ளல்களாக நம் நாட்டின் மக்கள் இருந்து வருகின்றனர்.
தீவிரவாதத்தை உள்நாட்டிலும் நடந்தாலும் சரி, வெளி நாடு மூலமாக நடந்தாலும் சரி இதை யாரும் ஆதரிக்கக் கூடாது. தீவிரவாதத்தை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் தகுதி நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்திற்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது.
அதேபோல் தீவிரவாதம் உருவாகாமல் இருக்க நாட்டின் தலைவர்களும் ஏழை எளிய மக்களுக்கு நல்ல உதவிகளையும், சலுகைகளையும் வாரி வாரி வழங்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்போம்! நாட்டு மக்களை காப்போம்!!
- ரா. மன்மதன்


சிந்திக்க வைக்கும் கார்ட்டூன்




Saturday, 21 August 2010

இளைய தலைமுறையே உஷார்



இன்டர்நெட் காதல்

பன்னெடுங் காலமாக உலக மக்கள் அனைவரும் தங்களின் தகவல்களை கடிதம் மூலம் பரிமாறிக் கொண்டனர். கடிதத்தின் மூலம் தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து, சுக துக்கங்கள், நலம் விசாரிப்பது போன்ற செய்திகளை பறிமாறிக் கொண்டனர். பின்னர் கணினி கண்டு பிடிக்கப்பட்டதும் இந்நிலை மாறியது.

கணினி கண்டு பிடித்த பிறகு நவீன யுகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் இன்டர்நெட், இமெயில் போன்ற வளர்ச்சியும் ஏற்பட்டது. இமெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுடன் அலுவலகப் பணிகளுக்கும் இது பெரிதும் உதவியது. 

அதன் பின்னர் யாஹு, கூகுள், ஸ்கைப் போன்ற சாட்டிங் புரோகிராம்களும் தலையெடுக்க ஆரம்பித்தன. முதன் முதல் யாஹு சாட்டிங்க வந்தவுடன் மக்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. இந்த யாஹு சாட்டிங்கில் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். 
வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் உறவினர்களிடம் கான்பரன்சிங் மூலம் அதாவது வெப் கேமரா மூலம் முகத்தை முகம் பார்த்து பேசும் வசதியால் இதை பயன்படுத்துவோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தொலைபேசியில் பேசி காசை கரியாக்குவதை விட பலமணி நேரம் முகத்தை முகம் பார்த்து பேசினாலும் இந்த சாட்டிங் மூலம் குறைந்த அளவே பணம் செலவானது. இதனால் மக்களிடையே இந்த சாட்டிங் புரோகிராம்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

ஆனால் சில சமூக விரோதிகள் தங்களை யார் என்றும், தங்களின் ஊர், முகவரி எது என்றும் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் பொய்யான தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். (எதற்காக என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களே தங்களிடம் பழகும்போது தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில் இருக்கும்போது, இந்த சாட்டிங் மூலம் ஊர் பேர், முகம் தெரியாத யாரே ஒருவரிடம் தங்களின் உண்மையான முகவரியைத் தந்தால் அதன் மூலம் பிரச்சினை ஏற்படும் என்று பயந்ததால் உண்மையான முகவரியைக் கூறபயந்தனர்.) இதைப் பற்றி கவலைப் படாத ஒருசிலர் மட்டுமே தங்களின் உண்மையான முகவரியை கூறினர். 

இந்த சாட்டிங்கில் போய் பார்த்தால்தான் தெரியும். அவ்வளவும் அசிங்கம். கெட்ட கெட்ட வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் உபயோகித்து பப்ளிக் சாட்டிங் எனப்படும் இடத்தில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு இதை ஒரு பொழுதுபோக்காகவே சிலர் செய்து வருகின்றனர்.
நவீன யுகம் வளர வளர பாதுகாப்பு என்பதற்கே பங்கம் வரும் வகையில் பல புதிய புதிய பிரச்சினைகள் இதன் மூலம் வளருகின்றன.

அப்படி இருந்தும் முகம், ஊர் பேர் தெரியாத, அறிமுகம் அல்லாத சிலரும் (ஆண்கள்) தங்களை பெண்கள் என்றும் 18 வயதுதான் ஆகிறது என்றும் ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றி ஒரு பொழுது போக்குக்காக இப்படி செய்து வந்தனர். இதன் மூலம் பல இன்னல்களை அப்பாவி ஆண்களும், பெண்களும் அனுபவித்தனர். 

அறிமுகமில்லாத நபர்களுடனும், புதிதாக ஏற்படுத்திக் கொள்ளும் நண்பர்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட பின்னர் அதை மறந்து இப்படி பல இன்னல்களில் மாட்டிக் கொண்டு வேதனைப்படுகின்றனர்.
சமீப காலமாக சாட்டிங் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்பர்களாகவும், உறவினர்களாகவும், கணவன் மனைவிகளாகவும் தங்களின் உறவுகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்...
சமீபத்தில் ஒரு வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால் திருச்சியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் நகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஒருவரைக் காத-த்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்த அந்தப் பெண்ணின் தந்தை இந்தக் காதலுக்கு இளைய மகள் சூர்யாவும் உடந்தை என்று எண்ணியதால் இனிமேல் காதல் கல்யாணம் என்று நீ கூறினாலும் அதற்கு அனுமதியில்லை என்று இளைய மகளிடம் கூறி விட்டார்.

நாளடைவில் இந்த சம்பவத்தை தனது தந்தை மறந்திருப்பார் என்று இளைய மகளும் ஒருவரைக் காத-த்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை உங்களுடைய சங்காத்தமே வேண்டாம்; ஆளை விடுங்க என்று தனியாக போய் விட்டார்.

முதல் படம் : சமையல் அறையில் கை நரம்பை அறுத்துக் கொண்டு படுத்திருக்கும் சூர்யா.
2ம் படம் : அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்

தாயுடன் தனியாக வசித்து வந்த சூர்யா தனது காதலை வளர்த்து வந்தார். இதற்கு அவரின் அம்மாவும் உடந்தையாக இருந்தார். அந்தக் காதலன் வேறு யாருமில்லை. இன்டர்நெட் சாட்டிங் மூலமாக வந்த காதலன்தான் அவன். 
சாட்டிங்கில் அறிமுகமான நபர் முத-ல் யார் என்றே தெரியாமல் இருந்த சூர்யாவுக்கு பின்னர் அவரின் காதல் தனது மனதை மாற்றியது. இதனால் இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்தது. இப்படி இவர்களின் காதல் கதை போய்க் கொண்டிருக்கும்போது ஒருநாள் காதலன் சாட்டிங்கில் வருவதையே நிறுத்திக் கொண்டான். 

இவளும் பலமுறை முயற்சி செய்தும் ஒருமுறை சாட்டிங்கில் வந்த காதலன், நமது காதலை எனது பெற்றோர் ஏற்கவில்லை. எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதனால் என்னை மறந்து விடு என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

இதனால் மனமுடைந்த சூர்யா கத்தியால் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் தனது அம்மாவிடமும் இதைப் பற்றிக் கூறியதும் அவரும் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டார்.

ரத்தம் வழிந்தோடிய பிறகும் இறக்காததால் வீட்டில் உள்ள கேஸ் இணைப்பை கழற்றி விட்டு சமையல் அறை முழுவதும் கேஸை கசிய விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீக்குச்சியை பற்றவைக்கக் கூட அவரிடம் தெம்பு இல்லை. 

அப்பொழுது அவர் இருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவர் கா-ங் பெல்லை அழுத்த ஸ்சுட்சில் இருந்து பொறி பறக்கவே வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் உடனே பற்றிக் கொண்டது. பெருத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அருகில் உள்ளவர்கள் வந்து தீயை அணைத்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். கருகிய நிலையில் தாய், மகளையும் மீட்டனர். 

இப்பொழுது இருவருமே மருத்துவமனையில் சீரியஸாக உள்ளனர்.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிமுகமில்லாதவர்களிடம், புதிதாக நண்பர்களாக ஆகுபவர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

எந்த ஒரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்ற முயற்சியைக் கை விட வேண்டும். 
பிறப்பது ஒருமுறைதான் என்றாலும் பிறப்பின் மகத்துவத்தை அறிந்து கொண்டு இதுபோன்ற தவறான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்தாலே இதுபோன்ற இன்னல்களி-ருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

- ஆர். மன்மதன்

Sunday, 15 August 2010

நாணயங்களைக் காணவில்லை

பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும்' என்பது முதுமொழி. இன்றைய உலகில் பணம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப்போய் உள்ளது.

பணம் இல்லாதவன் பிணம்', பணம் பத்தும் செய்யும்' என்பதுபோல இன்றைய யுகம் ஆகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பண்டைய காலத்தில் மனிதன் வணிகம் செய்யும்போது ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை பெற்றுள் கொள்வதே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பணம் என்ற ஒன்றை அவர்கள் கண்டறியவில்லை. இதனால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வந்தனர். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வராதா என அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

அரிய வகை நாணயங்கள்

இதற்கு ஒரு வடிகாலாக மனிதன் நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கினான். நாணயங்கள் பயன்படுத்துவதின் மூலம் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருள் வாங்குவதின் மூலம் ஏற்படும் சிரமம் வெகுவாகக் குறைந்தது. ஆதி காலத்தில் மனிதர்கள் நாணயங்களை தங்கத்தாலும், செம்புகளாலும், வெள்ளியாலும் தயாரித்து பயன்படுத்தி வந்தனர். நவீன யுகத்தில் அதை மாற்றி ரூபாய் நோட்டுகளாக காகிதத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் ரூபாய் நோட்டுகளையும், காசுகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நூறு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள் மிகவும் கலைநயமிக்கதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தது. அப்போதெல்லாம் நாணயங்கள் வெளியிடப்பட்டதும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
புதிதாக வெளிவந்துள்ள 10 ரூபாய் 

இந்தியாவில் நாணயங்கள் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில் Proof Coins மற்றும் Uncirculated Coins என்று இரு வகையான நாணயங்கள் உள்ளன. இந்த இரண்டு வகையான நாணயங்கள்  பொழுதுபோக்குக்காக சேகரிப்பதற்கு மட்டுமே தவிர வர்த்தகத்துக்கு உபயோகப்படாது. 1964ல்தான் முதல் கமோமரேட்டிவ் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறப்பு நாணயங்கள் அச்சிடப்படும்போது அதைப் பற்றிய விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்.

நாணயத்தை வெளியிடும் பிரனாப் முகர்ஜி

 இப்போது அந்நிலை மாறி விட்டது. புதிதாக நாணயம் வெளியிட்டு இரண்டு வருடங்கள் கழித்தும் சில நாணயங்கள் பெரும்பாலான மக்களிடம் கிடைப்பதில்லை. அந்த வகையில் சென்ற வருடம் 10 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்தும் மக்களின் பயன்பாட்டிற்கு அந்த நாணயம் வரவில்லை. 

ரூபாய்க்கான குறியீட்டை கண்டுபிடித்த தமிழகத்தைச் சேர்ந்த உதய் குமார்

ஏனென்றால் அந்த நாணயம் கலைநயமிக்கதாகவும், செம்பு மற்றும் தாமிரத்தால் ஆனதாகவும் இந்ததால் சில கள்ளப் பேர்வழிகள் அதை பதுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அந்த நாணயம் எப்படி உள்ளது என்பதைக் கூட பார்க்க முடியாமல் போனது. நாணயங்களைப் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு இரண்டு வருடங்கள் கூட சிறைத் தண்டனை  கூட கிடைக்கும். சிலர் நாணயங்களை சேகரிக்கிறோம் என்ற பெயரில் புதிதாக வெளியிடப்பட்ட நன்கு கலைநயமிக்க நாணயங்களை பதுக்கி வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் நாட்டில் அதிகப்படியான புதிதாக வெளியிடப்பட்ட நாணயங்கள் உலவி வருவது குறைந்து வருகிறது.

பல்வேறு வகையான ஐந்து ரூபாய் நாணயங்கள்

நாணயங்களை சேமித்து வைப்பதற்கென்றே காயின் செசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இதனை தொடர்பு கொண்டால் எப்போதெல்லாம் புதிதாக நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த அமைப்பு மூலம் நாணயங்களைப் பெற்று சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நாணயங்கள் சேகரிப்பது பொழுதுபோக்காகவும், பொது அறிவு வளர்ச்சிக்காவும் மட்டுமில்லாமல் சிறந்த முதலீடாகவும் சிலர் கருதுகின்றனர்.


ஏனென்றால் இந்த வகை அரிய நாணயங்கள் பிற்காலத்தில் ஏலத்தில் விடும்போது அந்த நாணயத்தின் மதிப்பை விட பன்மடங்கு விலை வைத்து அந்த வகை நாணயங்களை ஏலத்தில் விடுகின்றனர். இதன் மூலம் நல்ல வருவாயையும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள ரூ. 10 நாணயம் பிற்காலத்தில் அதாவது 5 வருடங்கள் கழித்து ஏலத்தில் விடும்போது அதன் மதிப்பு ரூ. 5,000 என்றும் ரூ. 10,000ம் என்று ஆகி விடும். இதை கருத்தில் கொண்டுதான் நாணயம் சேகரிப்போர் சிலர் இந்த கலை நயமிக்க 10 ரூபாய் நாணயத்தை பதுக்கி வைத்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

ஓட்டை காலணா

(நீங்கள் நாணயத்தை சேமித்து வைக்கிறேன் என்று இதுபோன்ற செயல் இறங்கி விட மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அப்படி சேமித்து வைப்பதாக இருந்தால் ஒரே வகையான நாணயமாக சேமித்து வைக்காமல் வேவ்வோறு வகையான நாணயமாக சேமித்து வைக்கவும்). 

எது எப்படியோ மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத வகையில் நாணயம் சேகரிப்போர் சிறந்த முறையில் இவற்றைச் சேகரித்தால் (அதாவது ஒருவர் ஒரு நாணயத்தை சேகரிப்பது) மக்களின் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கிடைத்து விடும். நான் கூட 10 ரூபாய் நாணயத்தை பார்த்ததே இல்லை. நெட்டில்தான் பார்த்திருக்கிறேன்.
- ஆர். மன்மதன்