தேனை சேமிக்கும் தேனீ
தேன் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். கடவுள் படைப்பில் உலகத்தில் எவ்வளவோ அற்புதங்கள் காணக் கிடக்கின்றன. கடவுள் அற்புதத்தில் தேன் மட்டும் பல வகைகளில் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. தேனை நம் உடல் உபாதைகளுக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம்.
தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? திருக்குர்ஆன் நன்கு படித்தவர்களுக்கு மட்டுமே அதன் ரகசியம் தெரியும். தற்போது இது குறித்து ஆராய்ச்சி செய்ததின் மூலம்தான் கண்டறிந்து உள்ளனர்.
நம்மில் பெரும்பாலோர் தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று ஆராய்ச்சி செய்யாமல் யாரே ஒருவர் விட்ட கதையின் மூலம் நாம் அதைப் பற்றி சிந்திக்காமல் பலரிடம் உளறிக் கொட்டுகிறோம். எவ்வாறு என்றால் தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி அதை தனது கூட்டல் சேமிக்கும்போது மலத் துவாரம் வழியாக வரும் உணவுதான் தேன் என்று விபரம் தெரியாத பலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது ஆராய்ச்சியின் மூலம் தேன் அவ்வாறு தேனை சேமிக்கவில்லை.
அதற்கு இரண்டு வயிறு உண்டு. ஒரு வயிற்றின் மூலம் உணவுகளை உண்டு மலத்துவாரத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றொரு வயிற்றில்தான் தேனை சேமித்து சில ரசாயன மாற்றங்களைச் செய்து வயிற்றின் கீழ் பகுதியில் வேறொரு துவாரத்தின் மூலம் தேனை சேமித்து வைக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நம்மில் பலபேர் தேன் என்பது தேனீயின் கழிவுப் பொருள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு அல்ல கழிவுப் பொருள் என்பது வேறு. தேன் என்பது வேறு என்று அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர். இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குர்ஆனில் இறைவன்,
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி-ருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளி-ருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
(திருக்குர்ஆன் 16:68,69)
வயிறுகளிலிருந்து என்ற வார்த்தையை சிந்தித்து பார்க்கவும். வயிறுகள் என்றாலே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட என்ற பொருள்படும். உடனே நீங்கள் "அப்போ தேனீக்களுக்கு பல வயிறுகள் உள்ளனவா?'' என்று கேட்கக் கூடாது. இப்போது இரண்டு வயிறுகள்தான் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.
திருக்குர்ஆனை சிந்தித்து வாசிப்பவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும். இருந்தபோதிலும் திருக்குர்ஆனைப் பற்றி தெரியாத சிலருக்கு இது புதிய தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
0 comments:
Post a Comment