விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுமா? என்ற கட்டுரை போட்டு ஒரு நாள் கூட ஆக வில்லை. ஒரு செய்தி என் மனைதி வெகுவாக பாதித்தது. அதாவது ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிலையைக் கரைக்க ஏரி, குளங்களுக்கு வந்தபோது அதில் மூழ்கி 21 பேர் இறந்துள்ளனர். இது வருந்தத்தக்க ஒன்றாகும்.
சிலையை மூழ்கடிப்பதற்கு பதிலாக தங்களின் அறிவையும், உடலையும், உயிரையும் மூழ்கடித்துள்ளனர். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் போலும். என்ன செய்வது என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும் இதுபோன்ற மூடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மத வெறி, ஜாதி வெறி பிடித்துப் போய் சிலர் இப்படி தங்களின் உயிரை இழக்கிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஊர்வலத்தால் பல கலவரங்கள் நடைபெற்றன. குறிப்பாக கன்னியாக்குமரியில் பல இடங்களில் சங்பரிவார அமைப்பினரால் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அது குறித்த செய்தி டிஎன்டிஜே டாட் நெட் இணைய தளத்தில் வெளியானது.
அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
இதையெல்லாம் வசதியாக மறைத்த தமிழக அரசு விநாயகர் ஊர்வலத்தின்போது இந்துக்கள் அமைதியே காத்தனர். தமிழகத்தின் எந்தவொரு இடத்திலும் கலவரம் ஏற்படவில்லை என்று பத்திரிகைகளில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment