அன்பான வாசகர்களே மிகுந்த வேலைப் பளுவின் காரணமாக செய்திகளைப் போட முடியவில்லை. கிடைக்கும் சிறு சிறு நேரங்களில்தான் செய்திகளைப் போட முடிகிறது சிரமத்திற்கு வருந்துகிறோம்...
Blogger
சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்
Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts
Thursday, 9 September 2010
Wednesday, 8 September 2010
இறைவன் படைப்பில் அற்புதங்கள்
தேனை சேமிக்கும் தேனீ
தேன் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். கடவுள் படைப்பில் உலகத்தில் எவ்வளவோ அற்புதங்கள் காணக் கிடக்கின்றன. கடவுள் அற்புதத்தில் தேன் மட்டும் பல வகைகளில் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. தேனை நம் உடல் உபாதைகளுக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம்.
தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? திருக்குர்ஆன் நன்கு படித்தவர்களுக்கு மட்டுமே அதன் ரகசியம் தெரியும். தற்போது இது குறித்து ஆராய்ச்சி செய்ததின் மூலம்தான் கண்டறிந்து உள்ளனர்.
நம்மில் பெரும்பாலோர் தேனீக்கள் தேனை எவ்வாறு சேமிக்கிறது என்று ஆராய்ச்சி செய்யாமல் யாரே ஒருவர் விட்ட கதையின் மூலம் நாம் அதைப் பற்றி சிந்திக்காமல் பலரிடம் உளறிக் கொட்டுகிறோம். எவ்வாறு என்றால் தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி அதை தனது கூட்டல் சேமிக்கும்போது மலத் துவாரம் வழியாக வரும் உணவுதான் தேன் என்று விபரம் தெரியாத பலர் கூறுகின்றனர். ஆனால் தற்போது ஆராய்ச்சியின் மூலம் தேன் அவ்வாறு தேனை சேமிக்கவில்லை.
அதற்கு இரண்டு வயிறு உண்டு. ஒரு வயிற்றின் மூலம் உணவுகளை உண்டு மலத்துவாரத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுகிறது. மற்றொரு வயிற்றில்தான் தேனை சேமித்து சில ரசாயன மாற்றங்களைச் செய்து வயிற்றின் கீழ் பகுதியில் வேறொரு துவாரத்தின் மூலம் தேனை சேமித்து வைக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நம்மில் பலபேர் தேன் என்பது தேனீயின் கழிவுப் பொருள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு அல்ல கழிவுப் பொருள் என்பது வேறு. தேன் என்பது வேறு என்று அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர். இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குர்ஆனில் இறைவன்,
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளி-ருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளி-ருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
(திருக்குர்ஆன் 16:68,69)
வயிறுகளிலிருந்து என்ற வார்த்தையை சிந்தித்து பார்க்கவும். வயிறுகள் என்றாலே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட என்ற பொருள்படும். உடனே நீங்கள் "அப்போ தேனீக்களுக்கு பல வயிறுகள் உள்ளனவா?'' என்று கேட்கக் கூடாது. இப்போது இரண்டு வயிறுகள்தான் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.
திருக்குர்ஆனை சிந்தித்து வாசிப்பவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும். இருந்தபோதிலும் திருக்குர்ஆனைப் பற்றி தெரியாத சிலருக்கு இது புதிய தகவலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Labels:
அறிவியல்
Monday, 6 September 2010
இஸ்லாமியப் பார்வை: கண்டு கொள்ளப்படாத கண்டுபிடிப்பாளர்
இஸ்லாமியப் பார்வை: கண்டு கொள்ளப்படாத கண்டுபிடிப்பாளர்: "இலங்கை தவ்ஹீத் சகோதரரின் உலக சாதனை. வீடியோ ஆதாரத்துடன்.MOTOR BIKE IN A HAND BAGதொகுப்பு - Rasmin M.I.Scஉலகிலேயே மிகச் சிரிய மோட்டார் பைக் -..."
Labels:
அறிவியல்
Thursday, 2 September 2010
எச்சரிக்கை
சுய வைத்தியர் ஆக வேண்டாம்
குழந்தைக்கு உடல் நலக்குறை ஏற்பட்டவுடன் நாம் என்ன ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். அங்கே மருத்துவர் பரிசோதித்து உடல் நலக்குறைக்கு தக்க வகையில் மருந்துகளை எழுதிக் கொடுத்தனுப்புவார்.
இதில் மற்றொரு வகையினர் உள்ளனர். அதாவது குழந்தைக்காகட்டும் தனக்காகட்டும் அவர்களே மருத்துவர்களாகி விடுவார்கள். மெடிக்கல் ஷாப்புக்கு சென்று குழந்தைக்கு பாராசிட்டமல் மாத்திரைகளையும், தனக்காக ரான்பாக்கி மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.
இதில் எந்த அளவுக்கு அந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஓவர் டோஸ் கொடுப்பதின் மூலம் குழந்தைக்கும், தனக்கும் அவர்களே வேட்டு வைத்துக் கொள்கின்றனர்.
இப்படி சுயமாக மருத்துவர் ஆக வேண்டாம் என்று சிட்னி பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் கூறியுள்ளார். இப்படி சுய வைத்தியர் ஆவதன் மூலம் எந்த நேரத்திற்கு எந்ததெந்த வகையான, எவ்வளவு மாத்திரைகளை இவர்கள் சரிவரத் தெரியாமல் உட்கொள்கின்றனர்.
மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் ஊழியர் இப்படித்தான் மருந்துகளைப் போட வேண்டும் என்று கூறினாலும் படிக்கத் தெரியாதவர்கள் சிலர் எந்தெந்த வேளைக்கு என்னென்ன மாத்திரைகளைப் போட வேண்டும் என்பதை மறந்துவிட்டு தப்பும் தவறுமாக மாத்திரைகளைப் போடுவதால் உடல் உபாதைகளுக்கும், ஸைடு எஃபெக்ட் எனப்படும் பக்க விளைவுக்கும் ஆளாகின்றனர்.
என்னதான் தகுந்த மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்று மருந்து வாங்கி உண்டாலும் எழுதிக் கொடுக்கும் மருத்துவரே சில சமயங்களில் தவறான மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் இதுபோன்ற பக்க விளைவுக்கு அப்பாவி பொது மக்கள் ஆளாகின்றனர்.
இதற்கு உதாரணத்திற்கு பல சம்பவங்களைச் சொல்லலாம். சமீபத்தில் நன்மங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி குழந்தை பெற்ற இரண்டு மாதத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து உடல் நலக்குறைவு பற்றி எடுத்துக் கூற, மருத்துவரோ சில மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை அந்தப் பெண்மணியின் கணவர் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வாங்கி வந்து தன் மனைவியிடம் கொடுக்க அவரே அதை உட்கொண்ட சில நேரங்களில் உடல் எங்கும் கொப்புளங்கள் ஏற்படத் தொடங்கியது. இது குறித்து மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரிடம் சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் சென்று கேட்கவே, "நான் சரியான மருந்துதான் எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதை சரியாகப் போடாமல் தவறாகப் போட்டதால்தான் இப்படி ஆகியுள்ளது என்று மழுப்பியுள்ளார்.
பாதிப்பட்ட அந்தப் பெண்மணியின் கணவர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகளையும், மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய மருந்துகளையும் எடுத்துக் காட்ட வாய் அடைத்துப் போன மருத்துவரோ நாளை வாருங்கள் என்று கூறி எஸ்கேப் ஆனார்.
உட-ல் கொப்புளங்கள் நிறைந்து புண்ணாகிப் போன அந்தப் பெண்மணியை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்ற நிலையிலும் அந்தப் பெண்மணியின் உடல் நிலை தேரவில்லை. உடல் நிலை மிகவும் மோசமாகி அவர் இப்போது இறந்து விட்டார். இப்போது அந்தப் பெண்மணியின் கணவர் இரண்டு மாத கைக்குழந்தையை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
இது யார் குற்றம்... மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவரின் குற்றமா? அல்லது மருந்தை கொடுத்த மெடிக்கல் ஷாப் ஊழியரின் குற்றமா? அல்லது அந்த மருந்ததை தயாரித்த நிறுவனத்தின் குற்றமா? ஒன்றுமே புரியவில்லை. இது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்ற தகவல் வேறு.
இப்படித்தான் மருந்துகள் நம்மை பாடாய் படுத்துகின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்துகளை போட இப்போது மிகவும் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். எங்கே நமக்கும் இதுபோல் ஆகி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
எனவே தக்க மருந்துகளை தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தும்படி பிரபல மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
யார் தகுந்த மருத்துவர்; எல்லோருமே போலியாகவே உள்ளனர். என்ன மருந்து; எல்லாமே போலியாகவே உள்ளது. யார் அந்த மருந்து தயாரிப்பு கம்பெனி; எல்லாமே போலியாகவே உள்ளது.
நாட்டில் மொத்தம் 350வகையான மருந்துகளுக்கு மட்டுமே மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போது 350 வகையான மருந்துகள் மட்டும்தான் உள்ளதா? ஆயிரக்கணக்கான மருந்து வகைகளை மெடிக்கல் ஷாப்பில் விற்கின்றனர். புதிது புதிதாக முளைக்கும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு புதிய வகை மருந்துகளை தயாரித்து லேபில் எலிகளைக் கொல்வதுபோல் மனிதர்களையும் கொன்று வருகின்றனர். இவர்களின் ஆராய்ச்சிக்கு மனிதனின் உயிர்தான் கேடயமா?
மக்களே மருந்துகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள்.
1. அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு,
2. எப்போது தயாரிக்கப்பட்டது,
3. எப்போது அதன் காலாவதி தேதி முடிவடைகிறது
4. எந்த நோய்க்கு என்ன மருந்து உபயோகப்படுத்துவது.
என்பதைப் பார்த்து உபயோகிக்கவும்.
Labels:
அறிவியல்
Thursday, 12 August 2010
விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
(ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்)
தொகுப்பு ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி (இலங்கை)
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.
வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அப்படி வாழ்ந்தால் அவற்றின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?அவைகளும் மனிதர்களைப் போன்றனவா?அல்லது வித்தியாச குணங்கள் கொண்டவையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குத்தான் யார் இருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள்.
முதலில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாக சொல்லப் படும் கதைகள் என்ன? கற்பனைகள் என்ன?விஞ்ஞானத் தகவல்கள் என்ன? என்பவற்றைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இதன் உண்மை நிலையை புரிந்து கொள்வது மிக எழிதானதாகி விடும்.
![]() |
| பூமியில் இறங்குவதாக சித்தரிக்கப்பட்ட பறக்கும் தட்டு (வரைபடம்) |
வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கதைகள்.
இது தொடர்பாக நிறையக் கதைகள் இருந்தாலும் மக்கள் பெறுமளவுக்கு நம்பக் கூடிய கிட்டத்தட்ட 5அல்லது 6 கதைகள் உள்ளன.அதில் முதலாவது: 1254ம் ஆண்டு இங்கிலாந்தின் எல்பன்ஸ் தேவாலயத்திற்கு மேலால் புதுமையான பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும்,அது வேற்றுக்கிரக வாசிகள் வருகை தரக்கூடிய பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது.
![]() |
| Aliens எனப்படும் வேற்று கிரகவாசிகள் (கிராபிக்ஸ் படம்) |
அதே போல் 1741ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதிக்கு மேலாக வட்ட வடிவத்தை விட சற்று சரிவான மர்மப் பொருள் ஒன்று பறந்து வின்னில் மறைந்ததாக போசெப் பிரபு என்பவர் கூறியிருந்தார்.அதுபோன்றே மின்குமிழ் வடிவத்தில் பறக்கும் பொருள் ஒன்று சுவிற்ச்சர்லாந்திற்கு மேலால் பறந்ததாக 1762ம் ஆண்டு கூறப்பட்டது.பிரான்சின் எம்பிரம் பகுதிக்கு மேலாக வட்ட வடிவில் பறக்கும் தட்டுக்கள் பல பறந்ததாக 1820ம் ஆண்டு தெரிவிக்கப் பட்டது.
| Aliens எனப்படும் வேற்று கிரகவாசி (கிராபிக்ஸ் படம்) |
1947ம் ஆண்டு பறக்கும் தட்டொன்ரைப் பார்த்ததாக விமான ஓட்டி ஒருவர் கூறிய தகவலும் இருக்கிறது.தாம் பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப் பட்டதாக 1971ம் ஆண்டு இரண்டு அமெரிக்கர்கள் கூறியிருந்தனர்.அதில் இருந்த உயிரினங்கள் அதிக உயரமும்,மெல்லிய உடம்பையும் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.இவ்வாரான ஏராலமான கதைகள் காணப்படுகின்றன.எல்லாம் கதைகள்தானே தவிர நிஜங்கள் அல்ல.
பறக்கும் தட்டுகள் பற்றிய விளக்கம் என்ன?
பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.
மில்லியன் கணக்கில் பறக்கும் தட்டுக்கள்(?)
கடந்த 40 வருட காலப் பகுதிக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேற்றுக் கிரகங்களில் இருந்து வருவதாக நம்பப் படும் மர்மப் பொருட்களை,பறக்கும் தட்டுக்களை தாம் கண்டதாக கூறியுள்ளனர்.1974ம் ஆண்டு அமெரிக்காவில் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது.அதில் அநேகர் இத்தகைய மர்மப் பொருட்களை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.(இதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப் படவில்லை)
1952ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாரான 1500 பறக்கும் தட்டுக்கள் வரை தெரிந்ததாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.அநேகமானோர் பறக்கும் தட்டுக்களாகக் கருதியவை வித்தியாசமான உரு அமைப்பை உடைய விமானங்கள்,
முகிற்கூட்டங்கள்,நட்சத்திரங்கள்,செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது.
முகிற்கூட்டங்கள்,நட்சத்திரங்கள்,செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது.
![]() |
| ராடார் எனும் கருவியில் சிக்காத நவீனரக போர் விமானம் (இதைத்தான் பறக்கும் தட்டு என நினைத்து விட்டார்களோ) |
அதே போன்றுதான் 1964ம் ஆண்டு சுவீடனுக்கு மேலாக பறக்கும் தட்டுக்களை அவதானித்ததாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் தெரிவித்தனர்.ஆனால் அத்தனை பேரும் அதை ஒரு ராக்கட் வடிவத்திற்குத்தான் ஒப்புக் காட்டினார்கள்.இதுவும் இது வரைக்கும் உண்மையென்று யாராலும் நிரூபிக்கப் படவில்லை.
அது போன்றே ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம் மிக்க மோய் உருவச்சிலை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடனேயே நிர்மானிக்கப் பட்டதாக சிலர் நம்புகின்றனர்.ஆனாலும் இவைகள் பொய்யான தகவல்கள் என விஞ்ஞானிகள் உருதியாக கூறிவிட்டனர்.
மனிதன் விண்ணில் வாழ முடியுமா?
இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.
இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உருதிப் படுத்துகிறது.
பூமியில் தான் வாழ முடியும்.
மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன.
அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன என்றும் நாம்கூறினோம்.(2:36)
(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.(7:24)
'அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.(7:25)
பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)
அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)
இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்துகூறப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.
முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.
அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.
வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.
மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.
ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.
![]() |
| பறக்கும் தட்டு (கிராபிக்ஸ் படம்) |
சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.
யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.
பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.
சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.
சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.
மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.
அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை குளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.
![]() |
| நவீனரக போர் விமானம் - இதர போர் விமானங்களுடன் |
இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.
ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான் கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.
ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.
விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?
பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம் தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.
பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.
(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)
மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.
துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.
இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.
உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.
ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.
எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும் தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.
உதவியவை
சகோதர் பி.ஜெ அவர்களின் திருக்குர்ஆன் மொழியாக்கம் விளக்கம் பகுதி
சகோதர் ஏ.கே.அப்துர் ரஹ்மான் அவர்களின் திருக் குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.
டிஸ்கவரிசேனல்
Labels:
அறிவியல்
Subscribe to:
Posts (Atom)











.jpg)




