Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, 6 October 2010

முக்கியமானவர்களின் மெயில்களை தனியாக பிரிக்க

உலகின் நம்பர் 1 இடத்தை கூகுள் இணைய தளம் பெற்றுள்ளதை நாம் அறிவோம். கூகுள் இணைய தளம் நமக்கு பல்வேறு பயன்பாட்டுள்ள அம்சங்களை அளித்துக் கொண்டிருப்பதால் அது முதல் இடத்தைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. அந்த வகையில் நம்மில் பலர் கூகுள் இணைய தளத்தில் அக்கவுண்ட் வைத்திருப்போம்.
நாம் வைத்திருக்கும் அக்கவுண்டில் இன்பாக்ஸில் பலரிடமிருந்து மெயில்கள் நமக்கு வந்திருக்கும். நாம் முக்கியமான நபர்களின் மெயில்களும் இந்த இன்பாக்ஸில்தான் இடம்பெறும். நமக்குத் தேவையான, முக்கியமானவர்களின் மெயில்களை மட்டும் தேடுவதில் பல்வேறு வழிகளை கூகுள் நமக்குத் தருகிறது.

Thursday, 9 September 2010

சிறந்த ஆன்டி வைரஸ்

இணைய தளம் இல்லாமல் உலகம் இல்லை என்றாகிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் இணைய தளத்தில் செல்லும்போது பாதுகாப்பில்லாமல் செல்கின்றனர். அதாவது தன்னுடைய கம்ப்யூட்டரில் தகுந்த ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாமல் செல்கின்றனர்.

நாம் பயன்படுத்தும் பல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்கள் டெமோ வர்ஷனாக கிடைக்கின்றன. இந்த டெமோ வர்ஷன் ஆன்டி வைரஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் அது மிகுந்த தாக்குதலை ஏற்படுத்தும் வைரஸ்களை கட்டுப்படுத்தாது. அப்படி கட்டுப்படுத்து என்று சொன்னால் அது முழுமையான சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்திடு என்று சொல்லும்.

Friday, 27 August 2010

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்

Free Memory Improve Master


நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.


இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.



டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  
Information Overview : 
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 


இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 

Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   
  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.