Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Wednesday 6 October, 2010

முக்கியமானவர்களின் மெயில்களை தனியாக பிரிக்க

உலகின் நம்பர் 1 இடத்தை கூகுள் இணைய தளம் பெற்றுள்ளதை நாம் அறிவோம். கூகுள் இணைய தளம் நமக்கு பல்வேறு பயன்பாட்டுள்ள அம்சங்களை அளித்துக் கொண்டிருப்பதால் அது முதல் இடத்தைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. அந்த வகையில் நம்மில் பலர் கூகுள் இணைய தளத்தில் அக்கவுண்ட் வைத்திருப்போம்.
நாம் வைத்திருக்கும் அக்கவுண்டில் இன்பாக்ஸில் பலரிடமிருந்து மெயில்கள் நமக்கு வந்திருக்கும். நாம் முக்கியமான நபர்களின் மெயில்களும் இந்த இன்பாக்ஸில்தான் இடம்பெறும். நமக்குத் தேவையான, முக்கியமானவர்களின் மெயில்களை மட்டும் தேடுவதில் பல்வேறு வழிகளை கூகுள் நமக்குத் தருகிறது.

நாம் யாரை முக்கியமான நபர்கள் என்று கருதுகிறோமோ அவர்களின் மெயில்கள் நமக்குத் தனியாக கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கும் இதில் வழிவகையுண்டு. நம்மில் பலபேருக்கு இந்த வழிவகை தெரியாமல் திணறி வருகின்றனர்.

நாம் யாரையெல்லாம் முக்கியமானவர்கள் என்று கருதுகிறோமோ அவர்களின் மெயில்கள் இன்பாக்ஸில் விழாமல் முக்கியமானவர்களின் பெயர்களில் வந்து விழுந்து விடும். இதனால் இன்பாக்ஸில் அவர்களின் மெயில்களை தேட வேண்டிய அவசியமும், கால விரயமும் நமக்கு மிச்சமாகும்

இது எதற்காக நான் சொல்கிறேன் என்றால் நமக்கு பலரிடமிருந்து பல குப்பை மெயில்கள் வரும் இதில் நமக்கு முக்கியமானவரின் மெயிலை சுலபமாகவும், தனியாகவும் கண்டறிய இது பயன்படும்.

இதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் இன்பாக்ஸ் காட்டப்படும். அதில் நீங்கள் யாரை முக்கியமானவர் என்று கருதுகிறீர்களோ அவர்களின் மெயிலை செலக்ட் செய்யவும். இப்போது மேலே உள்ள More Actions கிளிக் செய்யவும் அதில் Filter Messages like this என்பதை கிளிக் செய்யவும்இதில் நீங்கள் கவனமாக செயல் பட வேண்டும்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை காணவும்.

இப்போது Creat a Filter என்ற ஆப்ஸன் ஓபனாகும். இதில் From என்ற இடத்தில் நீங்கள் செலக்ட் செய்த மெயில் .டி.யை டைப் செய்யவும். (நீங்கள் செலக்ட் செய்த மெயில் .டி.யின் நபரின் மெயில்கள் அனைத்தும் கீழே வந்திருக்கும்.)


உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை காணவும்.

பிறகு Next Step என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடன் மற்றொரு ஆப்ஸன் ஓபன் ஆகும். இதில் Skip the Inbox என்பதை டிக் செய்து விட்டு Apply the Lable என்பதை டிக் செய்யவும். அதற்கு நேராக இருக்கும் Chose Lable என்பதை கிளிக் செய்யவும். அதில் New Lable என்பதை கிளிக் செய்தால் New Lable க்கு உண்டான பெயரை கேட்கும்.


உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை காணவும்.

நீங்கள் செலக்ட் செய்த மெயில் .டி.யின் நபரின் பெயரைக் குறிப்பிடவும். பெயரைக் குறிப்பிட்டு முடித்தவுடன் Also apply the lable  என்பதை செலக்ட் செய்து விட்டு creat a Filter என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் செலக்ட் செய்த மெயில் .டி.யி-ருந்து எத்தனை மெயில்கள் வந்தாலும் / வந்திருந்தாலும் அது அத்தனையும் அந்த பெயரில் தனியாக சேமித்து விடும். 


இப்போது அந்த குறிப்பிட்ட நபர் அனுப்பும் அனைத்து மெயில்களும் உங்களின் இன்பாக்ஸில் சேவ் ஆகாமல் தனியாக அவரின் பெயரில் சேவ் ஆகும். இதுபோல் நீங்கள் விரும்பும் அனைத்து நபரின் பெயர்களையும் செலக்ட் செய்து தனித்தனியாக சேவ் செய்து கொள்ளலாம்.

இன்னும் பல பயனுள்ள விஷயங்களை கூகுள் இணைய தளம் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி பின்னர் காணலாம்.


0 comments: