Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 28 October, 2010

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

தொடர் 1
போலிப் பகுத்தறிவுவாதிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அளிப்பதற்கு முன்னால் விமர்சிப்பவர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்ட சகோதரர் பீ.ஜே. அவர்களின் மறுப்புக் கட்டுரை கடந்த ஐந்து பகுதிகளாக இஸ்லாமியப் பார்வையில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் அது தொடர்ந்து வெளி வர உள்ளது.

இதன் காரணமாக மிஹ்ராஜ் பற்றிய கேள்விகளுக்கு பதிலைக் காணோமே என்று சிலர் கருதுவதால் அதுபற்றிய விளக்கத்தை இதே இதழில் இருந்து தொடராக வெளியிடுகிறோம்.

மிஹ்ராஜ் பற்றிய விளக்கத்தை சகோதரர் ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்கள் எழுதியுள்ளார். ஏற்கனவே 'அல் ஜன்னத்' இதழில் பீ.ஜே. ஆசிரியராக இருந்தபோது இதே உண்மை ஏட்டுக்கு இவர்தான் பதில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. உணர்வில் வெளியான இந்தக் கட்டுரையை வாசகர்களுக்கு அப்படியே தருகிறேன்.

மிஹ்ராஜ் பயணத்தின் மீதான நாத்திக விமர்சனம்
திராவிடர் கழகம் நடத்தும் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகத்தின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டல் செய்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் விமர்சனம் இவ்வாறு போகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'புராக்' என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்ற விண்வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது.

இதை அறிவியல்ரீதியாக நிரூபிக்க முடியுமா? 'புராக்' எனும் வாகனத்திற்குப் பயன்படுத்திய எரிபொருள் எது?

மேற்கண்ட இரண்டு கேள்விகளின் வாயிலாக நபிகள் நாயகத்தின் மிஹ்ராஜ் பயணத்தை விமர்சித்துத் தமது பகுத்தறிவிலின் ஆழத்தையும் (?), நபிமொழி, இஸ்லாமியர்களின் நம்பிக்கை மற்றும் அறிவியலிலும் விமர்சகர் பெற்றுள்ள அபாரப் புலமையை (?) வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்! இவருடைய கட்டுரை 'உண்மை' என்ற பெயரில் வெளியிடப்படும் மாதமிருமுறை இதழ், ஜூன் 1-15, 2008ல் வெளி வந்துள்ளது.

விமர்சகரின் அறியாமை :

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம் புராக் எனும் மிருக விமானத் தில் நடைபெற்றது என இவர் எழுதியதிலிருந்து இஸ்லாத்தைப் பற்றியும், நபி கள் நாயகத்தின் வரலாறு பற்றியும், இஸ்லாமியர்களின் நம்பிக்கை பற்றியும், இவர் பெற்றிருக்கும் அறிவின் இலட்சனம் என்ன என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்வெளிப் பயணம் செய்தது 'புராக்' வாகனத்தின் மீது இல்லை என்பதும், இந்த வாகனம் மக்காவிற்கும் ஜெருசலேமுக்கும் இடையிலுள்ள பயணத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதுமே உண்மையாகும். ஆனால் இஸ்லாத்தை விமர்சிக்க வந்த விமர்சகர் நபிகள் நாயகம் புராக்கில் ஏறி விண்வெளிப் பயணம் செய்ததாகக் கூறி நபி மொழிகளை ஆராயாமல் கட்டுரை எழுதுகிறார்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணம் அவருடைய 52ம் வயதில் மக்காவில் இருக்கும்போது நடைபெறுகிறது. இஸ்லாத்தின் தியாக மிகு வரலாற்றுச் சின்னங்கள் மக்கா நகரிலும் மற்றும் ஜெருசலேம் நகரிலும் மலிந்துள்ளன.

எனவே மிஹ்ராஜ் பயண தினத் தன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவதாக ஜெருசலேம் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் 'காண வேண்டும், அறிய வேண்டும்' என அவருடைய இறைவன் நாடிய வைகளை அவர் கண்டறிந்து சிறப்பு மிக்க மஸ்ஜித்-அல்-அக்ஸாவில் தொழுத பின்னர் அந்த சிறப்பு மிக்க இறையில் லத்திலிருந்தே அவரது விண்வெளிப் பயணம் ஆரம்பமாகிறது. அவ்வாறே விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு அதே சிறப்பு மிக்க இறையில்லமாம் மஸ்ஜித்-அல்-அக்ஸாவில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து திரும்பவும் பழையபடி மக்கா நகருக்குத் திரும்புகிறார்.

சுருங்கக் கூறின், மிஹ்ராஜ் பயணத் திற்கு முன்னர் மக்காவிலிருந்து ஜெருசலேமுக்கும் மிஹ்ராஜ் பயணம் முடிந்த பிறகு ஜெருசலேமிலிருந்து மக்காவிற்கும் நபிகள் நாயகம் செய்த பயணத்திற்கே புராக் வாகனம் பயன்படுத்தப்பட்டதே அன்றி நபிகள் நாயகம் புராக்கில் ஏறி விண்வெளிப் பயணம் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புராக்கில் விண்வெளிப் பயணம் செய்ய வில்லையென்றால் அவருடைய மிஹ் ராஜ் பயணம் எவ்வாறு நடைபெற்றது எனக் கேட்பதாயின் அதற்குரிய பதில் அதன் பெயரிலேயே உண்டு.

ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் மிஹ்ராஜ் பயணம் செய்தது மிஹ்ரஜில் ஆகும். இந்த மிஹ்ராஜ் எனும் சாதனம் (மிஹ்ராஜ் வெறும் ஒரு வாகனம் என்றோ அல்லது வெறும் ஒரு உபகரணம் என்றோ கூற முடியாது. ஆனாலும் இருவிதத்திலுள்ள அமைப்பும் இணைந்த ஒன்றாகவே நபி மொழியிலிருந்து தெரிய வருகிறது). நாம் வாழு கின்ற உலகைச் சார்ந்ததன்றி வேறு உலகைச் சார்ந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணத்தின் உண்மை நிலை இவ்வாறிருக்க, அதை விமர்சிக்கிறேன் பேர்வழி எனக் கிளம்பி வந்த பெரியார் தொண்டர் நபிகள் நாயகம் புராக்கில் ஏறி விண்வெளிப் பயணம் செய்ததாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் என்றும் அதற்குரிய அறிவியல் ஆதாரம் எங்கே என்றும் வினவுகிறார். என்னே இவரது நபி மொழிப் புலமை!  என்னே இவரது ஆய்வுத்திறன்!!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

- ஏ.கே. அப்துர் ரஹ்மான் 

0 comments: