Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 28 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 6

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து கிண்டலடித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து திராவிடக் கழகத்தின் உண்மை எனும் பொய் ஏடு முஸ்லிம்களையும் உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்திருந்தது.

எனவே பகுத்தறிவு வேடம் போட்டுத்திரியும் இவர்கள்தான் உண்மையில் மூட நம்பிக்கையாளர்கள் என்பதைத் தக்க காரணங்களுடன் கடந்த ஐந்து வாரங்களாக நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம்

தொடர் 1
போலிப் பகுத்தறிவுவாதிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அளிப்பதற்கு முன்னால் விமர்சிப்பவர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்ட சகோதரர் பீ.ஜே. அவர்களின் மறுப்புக் கட்டுரை கடந்த ஐந்து பகுதிகளாக இஸ்லாமியப் பார்வையில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் அது தொடர்ந்து வெளி வர உள்ளது.

Tuesday 26 October, 2010

சாமியார்களின் தொடரும் காம லீலைகள்

இறைவன் ஆணையும், பெண்ணையும் எதற்காகப் படைத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மனித அறிவிலிகள் சிலர் ஏற்படுத்திய தேவையில்லாத கலாச்சாரங்கள் மனித இனத்தையே அழிவுப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

Monday 25 October, 2010

சென்னை 3வது விவாதம்

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கச் வந்தவர் மானத்தை இழந்தார்.
 
சென்னை 3வது விவாதம். 
தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

நண்பரின் வெற்றிக்கு உதவுவோம்

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

Sunday 24 October, 2010

பர்தாவை விமர்சித்த பயங்கரவாதி!

சாத்தா குரூசில் ஒரு மாநகராட்சி மருத்துவமனையில் இரண்டு வயது ஆண் குழந்தையை பர்தா அணிந்து ஒரு பெண் கடத்திச் சென்றுவிட்ட காரணத்தால் பர்தா உடை தடை செய்யப்பட வேண்டுமென்று பாசிஸ பால்தாக்கரே தமது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.

மரணங்களைத் தடுக்க இருக்கையை மாற்ற வேண்டும்

காலையில் நாம் வேலைக்கு அறக்கப் பறக்க கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு வருவோம். இந்த முறையாவது பஸ்ஸில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் என்று வீராவேசமாக நினைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து பார்த்தால்தான் தெரியும். 

Saturday 23 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 5

தமிழில் அர்ச்சனை

கடவுள் இல்லை என்று ஒருபுறம் கூறிக் கொள்ளும் போலிப் பகுத்தறிவுவாதிகள் இன்னொருபுறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.

கடவுள் இல்லை என்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை - எந்த மொழியில் இருந்தாலும் - அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். நேர்மையான - சமரசம் செய்து கொள்ளாத - பகுத்தறிவு இப்படித்தான் தீர்ப்பளிக்கும்.

Monday 18 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 4

பிறரை நோக்கி கேள்வி எழுப்புவோர் அதுபோன்ற கேள்விகள் தம்மை நோக்கி எழாதவாறு தமது கொள்கை கோட்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா மதத்தினரையும் மூடர்களாகச் சித்தரித்து கேலி செய்யும் போலிப் பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினர், மதவாதிகளை மிஞ்சும் வகையில் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதை நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.

Thursday 14 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர் வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள்போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறி வுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.

Monday 11 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 2

தொடர் 2
முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டலடித்து கட்டுரை எழுதியதையும், "உண்மை' ஏட்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் புரிந்து கொள்ள சில விஷயங்களையும் சென்ற இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

Friday 8 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு உணர்வு பதிலடி

  போலி பகுத்தறிவுவாதிகளைப் பற்றிய செய்தியை ஃபிளாஷ் அப்ளிகேஷனாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் போட்டேன். இந்த அப்ளிகேஷனை கிளிக் செய்தால் உணர்வில் எப்படி லே அவுட் செய்யப்பட்டிருந்ததோ அதை படமாக நீங்கள் பார்த்து படித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தேன். இது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. 

எனவே அந்த செய்தியை நீங்கள் படிக்கும் விதத்தில் எழுத்தாகப் போட முடிவு செய்துள்ளேன் வேலைப் பளுவின் காரணமாக இப்படி படமாக போடலாம் என்று நினைத்திருந்தேன். 

Wednesday 6 October, 2010

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு உணர்வு பதிலடி

இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறும் போலி பகுத்தறிவுவாதிகளான தி.. கட்சியினர் நடத்தும் "உண்மை' நாளேட்டிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஏடான "உணர்வு' வார இதழ் "போலி பகுத்தறிவுவாதிகளுடன் விவாதிக்க உணர்வு அறைகூவல் : உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 2008 முதல் மே 2009 வரை 21 தொடர்களாக வெளியிட்டது
இந்த தொடர் வெளி வந்து 3 மாதங்கள் கழித்து தி.. கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் சென்னையில் 2 நாள் நேரடி விவாதம் செய்து தங்களின் கொள்கையில் தோற்றுப்போய் ஓடி விட்டனர்.

முக்கியமானவர்களின் மெயில்களை தனியாக பிரிக்க

உலகின் நம்பர் 1 இடத்தை கூகுள் இணைய தளம் பெற்றுள்ளதை நாம் அறிவோம். கூகுள் இணைய தளம் நமக்கு பல்வேறு பயன்பாட்டுள்ள அம்சங்களை அளித்துக் கொண்டிருப்பதால் அது முதல் இடத்தைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. அந்த வகையில் நம்மில் பலர் கூகுள் இணைய தளத்தில் அக்கவுண்ட் வைத்திருப்போம்.
நாம் வைத்திருக்கும் அக்கவுண்டில் இன்பாக்ஸில் பலரிடமிருந்து மெயில்கள் நமக்கு வந்திருக்கும். நாம் முக்கியமான நபர்களின் மெயில்களும் இந்த இன்பாக்ஸில்தான் இடம்பெறும். நமக்குத் தேவையான, முக்கியமானவர்களின் மெயில்களை மட்டும் தேடுவதில் பல்வேறு வழிகளை கூகுள் நமக்குத் தருகிறது.

Friday 1 October, 2010

அரசியல்தனமான தீர்ப்பு!

   ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.