Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Wednesday, 6 October 2010

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு உணர்வு பதிலடி

இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறும் போலி பகுத்தறிவுவாதிகளான தி.. கட்சியினர் நடத்தும் "உண்மை' நாளேட்டிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஏடான "உணர்வு' வார இதழ் "போலி பகுத்தறிவுவாதிகளுடன் விவாதிக்க உணர்வு அறைகூவல் : உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 2008 முதல் மே 2009 வரை 21 தொடர்களாக வெளியிட்டது
இந்த தொடர் வெளி வந்து 3 மாதங்கள் கழித்து தி.. கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் சென்னையில் 2 நாள் நேரடி விவாதம் செய்து தங்களின் கொள்கையில் தோற்றுப்போய் ஓடி விட்டனர்.
அதாவது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

இறைவன் இல்லை என்பதற்கு பல்வேறு விதமான ஆதாரங்களை (?!) அவர்கள் எடுத்துப் போட்டனர், இறைவன் இருக்கிறான் என்று அறிவியல் பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த அடுக்கடுக்கான ஆதாரங்களுக்கு பதில் கொடுக்க முடியாமல் முடிவில் சரணடைந்தனர். இந்த விவாத நிகழ்ச்சி டி.வி.டி.யாக தயாரிக்கப்பட்டு சக்கைபோடு போட்டது. அந்த டி.வி.டியை வேண்டுவோர் 9976649595 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறி வந்தோரும். இறைவன் என்பவன் எப்படிப்பட்டவன் என்பதை அறியாதவர்களும் இந்த விவாத டி.வி.டி.யைப் பார்த்து தெளிவு பெற்றனர். இஸ்லாத்தையும் ஏற்றனர் என்பது தனி விஷயம். இந்த விவாதத்திற்கு காரணமாக இருந்த இந்த தொடர் தற்போது நம் பிளாக்கில் ஃபிளாஷ் அப்ளிகேஷனாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து படித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

0 comments: