மூட நம்பிக்கைக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. யாரைக் கும்பிட வேண்டும். எதைக் கும்பிடக் கூடாது என்று நம்மில் பல பேருக்குத் தெரியவில்லை. இறைவன் ஒருவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனின் படைப்பில் உருவானதுதான்.
இப்படி இறைவன் படைத்த படைப்பைக் கண்டு மனிதன் இறைவனை வணங்காமல், அவன் தயாரித்த பொருள்களையே அவன் வணங்கும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டும்தான்.



