Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Sunday 24 October, 2010

பர்தாவை விமர்சித்த பயங்கரவாதி!

சாத்தா குரூசில் ஒரு மாநகராட்சி மருத்துவமனையில் இரண்டு வயது ஆண் குழந்தையை பர்தா அணிந்து ஒரு பெண் கடத்திச் சென்றுவிட்ட காரணத்தால் பர்தா உடை தடை செய்யப்பட வேண்டுமென்று பாசிஸ பால்தாக்கரே தமது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரத்தில் காவி பயங்கரவாதிகள் என்று எங்களை யாரும் கூறக் கூடாது என ஒரு பயங்கரவாதக் கூட்டம் கொக்கரித்துக் கொண்டிருக்க, மறுமுனையில் பர்தா குறித்து விமர்சனம் செய்திட பால்தாக்கரேயை களம் இறக்கி விட்டிருக்கிறது சங்பரிவாரக் கூட்டம்.

பால் தாக்கரே

இந்த பயங்கரவாதிகளை காவி பயங்கரவாதிகள் என்று உலகிற்கு அடையாளம் காட்டிட உள்குத்து வேலை புரியும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்களின் ஆதரவு தேவையில்லை. இவர்களது பாசிஸக் கூட்டணி புரியாமல் ப. சிதம்பரத்திற்கு ராயல் சல்யூட் என்று பாராட்டு சுவரொட்டி ஒட்டும் இஸ்லாமிய அமைப்புகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் மீதான இஸ்லாமிய சமுதாயத்தின் கவனத்தை காவி பயங்கரவாதம் என்ற சொல்லின் மூலமும், பர்தாவின் மூலமும் சர்ச்சையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டிருப்பது இந்து சமுதாயம் என்னும் தோற்றத்தை ஏற்றுக் கொள்ளச் செய்திட முயன்றால் அது அவர்களின் மெகா மடமைக்குச் சான்றாக அமையும்.

பர்தா அணிவது முஸ்லிம்கள் மார்க்கச் சட்டமல்லாமல் பேணக்கூடிய தொப்பி போன்ற சமாச்சாரம் அல்ல. அது இறை நம்பிக்கையின் அடிப்படையில் இறைக் கட்டளையின் அடிப்படையில் பேணப்படும் ஒழுங்காகும். இதனை குறை கூறும் விதமாக தலையங்கம் எழுதுவது, தடை விதிக்கும் விதமாக கோரிக்கை வைப்பது மத வன்முறையைத் தூண்டும் செயலாகும்.

மும்பை மஹாராஷ்டிராக்காரர்களுக்கே சொந்தம், பிற மாநிலத்தவர்கள் வாழ அனுமதியில்லை என்று இந்துக்களுக்குள் இன வெறியைத் தூண்டி, வயிற்றுப் பிழைப்பிற்காக வரிசையில் நின்று வேலை வாய்ப்பை தேடியவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்களை நடத்தியவர்கள்தான் இந்த பால்தாக்கரே கூட்டத்தினர் ஆவார்கள்.

இனக்கலவரங்களையும், மதக் கலவரங்களையும் தூண்டி குளிர் காயும் இவர்களைப் போன்ற சமூக விரோத சக்திகளைக் கண்டு அஞ்சும் போக்கினை காங்கிரஸ் அரசு கைவிட்டால் மாத்திரமே நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்பெறும்.

தொழில் துவங்க பை நிறைய பணம் தருகிறோம் என்று மாவோயிஸ்டுகளுக்கு கௌரவக் கப்பம் கட்டுவதைப்போல, குறு நில மன்னர்களாக உருவெடுக்கும் பால்தாக்கரே போன்றவர்களுக்கும் கௌரவக் கப்பம் கட்டும் நிலை காங்கிரஸுக்கு ஏற்படும்.

வன்முறையாளர்களை ஆளும் கட்சியின் ஒரு அங்கத்தினர்களாக அங்கீகரித்து காங்கிரஸ் செயல்படும் வரை அது கப்பம் கட்டி காங்கிரஸாகவே திகழும்.

சாதுக்கள் எனும் பெயரால் முழு நிர்வாணமாக யாத்திரை செல்லும் அவலங்களை மதச்சம்பர்தாயம் என்னும் பெயரால் நிறைவேற்றுவோருக் கும், கோயில்களில் நிர்வாணச் சிலைகள் மூலம் காம சூத்திரங்களை கற்பிப்போருக்கும் முழுமையாக அவையங்களை ஆடைகள் மூலம் மறைக்கும் சமுதாயத்தைக் காணும்போது வேறுபாடாகத்தான் தோன்றும்.

இஸ்லாமிய சமுதாயம் கடைபிடிக்கும் பர்தாவை தடை செய்யச் சொல்வது, அதனை தடை செய்யக் கோரும் தலைவர்களின் குடும்பத்துப் பெண்களின் உள்ளாடைகளை களையச் சொன்னால் எத்தகைய எல்லை மீறல்களை அது ஏற்படுத்துமோ அதற்குச் சமமானதாகும் இது.

ஒரு பெண் தமது கூந்தலை அந்நிய ஆடவருக்கு காட்டுவது தமது தொடைகளை வெளிப்படுத்திக் காட்டுவற்குச் சமம் என்று இறைத்தூதர் கூறியிருக்க அதன் மீது தடை விதிக்க கோரிக்கை வைப்பது நிர்வாணப்படுத்துவதற்குச் சமமானது என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்.

முகத்தை மறைப்பதால் தீங்கு ஏற்படுகிறது என்று மாத்திரம் பால்தாக்கரே கூறவில்லை, பர்தா மற்றும் உடலை முழுமையாக மூடும் பர்தா கலாச்சாரத்திற்கு தடை விதித்த பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை மாத்திரம் அல்லாமல் உடலை முழுமையாக மறைக்கும் பர்தா முறைக்கும் தடை வேண்டும் என்பது இவர்களது விருப்பம்.

முகத்தை முழுமையாக மறைப்பது பர்தா அணியும் முறையில் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றுதான் ஆயினும் பால்தாக்கரே சொல்கிறார் என்பதற்காக அனை இஸ்லாமியர்களிடம் தாக்கல் செய்திட இயலாது. அதே நேரத்தில் இந்துத்துவா தீவிரவாதிகள் குழந்தை கடத்தல் முதல் குண்டு வைப்பது வரை குற்றச் செயல்களைப் புரிந்து இஸ்லாமிய அடையாளம் பூசி விட்டு தப்பித்து விடாதிருக்க முகங்களை முழுமையாக மறைக்கும் முறையை சமுதாயம் தவிர்க்கலாம்.

பர்தா அணிந்து குழந்தையை கடத்தும் குற்றத்தை ஒருவர் புரிந்தார் என்பதற்காக பர்தாவை தடை செய்யக் கோரினால் கருவறையில் உள்ள குழந்தையை குஜராத்தில் குத்தி கிழித்தவன் பர்தா அணிந்து குற்றம் புரிந்தவனா?

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது முரளி மனோகர் ஜோஷியின் மீது தாவிக் குவித்து கட்டிப் பிடித்த உமாபாரதி பர்தா அணிந்துதான் உற்சாகத்தில் தவ்வினாரா? இவர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்பட்டுவிட்டனரோ? இல்லை இவர்களை யார் என்று இன்னும் அடையாளம் தெரியவில்லையா?

தலைக் கவசம், உயிர்க் கவசம் என்று போதனை செய்து ஹெல்மெட் அணியச் சொல்லும் கட்டாயச் சட்டம் இவர்களின் கூற்றுப்படி கே-க் கூத்தாகி விடும். பர்தா குறித்த பால்தாக்கரேயின் கருத்தை வெளியிட்ட தினகரன் நாளிதழ் கூடுதல் செய்தியாக அதனையும் வெளியிட்டிருந்தது. அவர்களின் சாதனைப் பட்டியலில் பர்தா விவகாரம் கண்டிப்பாக இணையாது என்பதை பத்திரிகை உலகம் எழுதி வைத்துக் கொள்ளட்டும்.
-          எம். அஜ்மீர் அலி, திருப்பத்துர்

0 comments: