Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Monday, 18 October 2010

போலி பகுத்தறிவுவாதிகள் - தொடர் 4

பிறரை நோக்கி கேள்வி எழுப்புவோர் அதுபோன்ற கேள்விகள் தம்மை நோக்கி எழாதவாறு தமது கொள்கை கோட்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா மதத்தினரையும் மூடர்களாகச் சித்தரித்து கேலி செய்யும் போலிப் பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினர், மதவாதிகளை மிஞ்சும் வகையில் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதை நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து அவர்கள் உணர்வு ஏட்டை வம்புக்கு இழுத்ததன் காரணமாகவே அவர்களை அம்பலப்ப டுத்தும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். கடந்த மூன்று தொடர்களை வாசிக்கத் தவறியவர்களுக்காக இந்த விபரத்தைத் தெரிவிக்கிறோம்.

பகுத்தறிவையும், அறிவியலையும், சுயமரியாதையையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுகளின் அடிப் படையில் போலிப் பகுத்தறிவுவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கான மேலும் சில ஆதாரங்களைக் காண்போம்.

கருஞ்சட்டை

தம்மைப் பகுத்தறிவுவாதிகள் என்று அடையாளப்படுத்தி கருப்புச் சட்டை அணிவதை திராவிடர் கழகத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதைச் செய்யலாம்; இதைச் செய்யலாகாது; இதை உண்ணலாம்; இதை உண்ணக் கூடாது என்று மதங்களில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அந் தந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.

போலிப் பகுத்தறிவுவாதிகள் இதைக் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எல்லா உணவும் உண்பதற்கு உரியது தானே? இதை உண்ணக்கூடாது, இதைத்தான் உண்ண வேண்டும் என்பது மூட நம்பிக்கையில்லையா?

வலது கையால் சாப்பிட வேண்டும்; இடது கையால் சாப்பிடக்கூடாது என்று கூறி இடது கையை ஒதுக்குவது மூட நம்பிக்கையில்லையா என்றெல்லாம் பயங்கரமான கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.

ஒரு சமுதாயத்தினர் தம்மை அடை யாளப்படுத்திக் கொள்வதற்காக நெற்றி யில் திருநீறு இடுவதையும், பூநூல் அணிவதையும் கேலி செய்வதுடன் சில நேரங்களில் பூநூல் அறுப்பிலும் இவர் கள் இறங்கியதை நாடு அறியும்.

இவர்களின் இந்த நிலைப்பாடுதான் அறிவுப்பூர்வமானது என்றால் இந்த நிலைப்பாட்டை மீறாமல் இவர்கள் நடக்க வேண்டுமன்றோஆனால் உலகில் எத்தனையோ வண்ண ஆடைகள் இருக்க கறுப்புதான் பகுத்தறி வின் அடையாளம் என்று நடக்கின்றார்களே! இதில் ஏதாவது பகுத்தறிவு உள்ளதாஇவர்கள் பேசும் போலிப் பகுத்தறிவை பச்சை சட்டை போட்டுக் கொண்டு பேசினால் நாக்கு எழாதா?

உலகில் உள்ள எல்லா நிறங்களையும் சோதனைக் கூடத்தில் சோதித்துப் பார்த்து கறுப்பு நிறத்துக்குள் மட்டும்தான் பகுத்தறிவு ஒளிந்து கிடக்கின்றது, மற்ற நிறங்களில் மூட நம்பிக்கைதான் ஒளிந்து கிடக் கின்றது என்று கண்டு பிடித்தபின்தான் கறுப்புச் சட்டைக்காரர்களாக அவதாரம் எடுத்தார்களா?

நாங்கள் இந்தக் கொள்கையுடையவர் கள் அல்லது இந்த இனத்தவர்கள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பூநூல் அணிவது மூட நம்பிக்கை என்றால், நாங்கள்தான் பகுத்தறிவின் மொத்த வியாபாரிகள் என்பதன் அடையாளமாக கருப்புச் சட்டை அணி வதும் மூடநம்பிக்கை அல்லாமல் வேறு என்ன?

"இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே'' எனக் கூறி எத்தனையோ இன்பங்களை மனித குலத்துக்குக் கிடைக்காமல் செய்துவிட்டனர் என்று மதத்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் கருஞ்சட்டைக்காரர்களே! பல்வேறு வண்ணங்களில் ஆடைகளை அணிந்து அதனால் கிடைக்கும் இன்பங்களை இழந்துவிட்டீர்களே!

மதங்களால் இன்பங்களை இழப்பதுபோல் உங்கள் போலிப் பகுத்தறிவின் காரணமாகவும் எவ்வளவு இன்பங்களை மனிதர்களுக்குக் கிடைக்காமல் செய்து விட்டீர்கள்.

என்னதான் பகுத்தறிவுவாதம் பேசினாலும், அறிவியல் என்று கத்தினாலும் நீங்களும் அதைக் கடந்து வெளியே சென்று விடுகிறீர்களே. இதை எண்ணிப் பார்க்க மாட்டீர்களா?

பெரியார் சொன்னார் என்ற குருட்டு பக்தி தவிர இதில் பகுத்தறிவோ அறிவியலோ உள்ளதா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது

கடவுள் இல்லை என்பதுதான் போலிப் பகுத்தறிவுவாதிகளின் பிரதானக் கொள்கை. அதிலும் இந்துமத தெய்வங்கள் பற்றி புராணங்களில் எழுதப்பட்டிருப்பதைக் காரண காரியத்துடன் பொது மேடையில் இவர்கள் விமர்சனமும் செய்கிறார்கள். கடவுள்களின் கதைகளில் உள்ள ஆபாசத்தையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

கடவுள் எனக் கூறி சிலைகளை வழிபவதும், அவற்றின் முன்னே உணவைப் படைப்பதும் மூட நம்பிக்கை எனவும் இவர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில் பிள்ளையார் போன்ற சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் தமது வெறுப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

இந்து மதக் கடவுள்கள்தான் தீண்டா மையையும், சாதி வேறுபாட்டையும் உருவாக்கியவர்கள் எனவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாதங்களில் அவர்கள் பகுத்தறிவுடன் நடக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

இப்படி ஒரு பக்கம் கூறிக் கொண்டு அந்தக் கல்லுக்கு பூஜை செய்யும் உரிமை அனைவருக்கும் வேண்டும் என்று இவர்கள் கோருகின்றனர். ஒரு நம்பிக்கை, ஒரு செயல் தவறு என்றால் அதை ஒழிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதுதான் பகுத்தறிவு.

பாண்டிச்சேரிக்காரன் மது அருந்துகிறான்; அது தவறு; அதை ஒழிக்க வேண்டும்; எனவே தமிழ்நாட்டு மக்களுக்கும் குடிப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று ஒருவன் பேசுவதற்கும் உங்கள் பிரச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்?

எதைக் கல் என்று நம்புகிறீர்களோ அதைக் கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள் என்றால், நீங்கள் நம்புவதுபோல் அவனையும் நம்ப வைக்கத்தான் நீங்கள் பாடுபட வேண்டும்.

அது கல்தான், எல்லோரும் அதை பூஜை செய்ய வேண்டும் என்று கூறினால் ஒரு இனத்தின் மீதான வெறுப் புணர்வுதான் அதன் பின்னணியில் உள்ளது; பகுத்தறிவு ஏதும் இல்லை.

இந்துக் கடவுள்களின் ஆபாசக் கதைகளை அதைவிட ஆபாசமாக மேடையில் முழங்கி விட்டு இவ்வளவு ஆபாசமான கடவுளை என் மக்களும் வழிபட்டு ஆபாசக் கடவுளுக்கு மரியாதை செய்யும் வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்பதில் பகுத்தறிவோ, அறிவியலோ இருக்கிறதா?

சிலைகளுக்கு முன்னால் உணவுகளைப் படைத்து வீணாக்கலாமா என்று ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து கொண்டு இவ்வாறு வீணாக்கும் உரிமை என் மக்களுக்கும் வேண்டும் எனக் கேட்பதில் அறிவியல்பூர்வமான பார்வை ஏதும் இருக்கிறதா?

கடவுளின் பெயரால் அர்ச்சனை செய்தால் அதை ஐயர்தான் எடுத்துக் கொள்கிறார்; கடவுள் எடுத்துக் கொள்வதில்லை என்று ஒருபுறம் கூறிக் கொண்டு என் மக்களுக்கும் இதுபோல் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்பதில் அடங்கியுள்ள பகுத்தறிவு சித்தாந்தம் என்ன?


இந்த முரண்பாட்டின் காரணமாகத்தானே உங்களால் மக்களை வென்றெடுக்க முடியவில்லை.

எது மிகப் பெரிய தவறு என்று சாதிக்கிறார்களோ அதில் மக்களைத் தள்ளும் வகையில் "அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்'' எனக் கூறி மக்கள் விழிப்புணர்வு அடைவதைத் தடுப்பதில் உள்ள பகுத்தறிவு தத்துவம் என்ன? போலிப் பகுத்தறிவுவாதிகள் விளக்கத் தயாரா?

உணர்ச்சிக்கு இடம் கொடுப்பவர்கள்தான் இதுபோன்ற முரண்பாடான முடிவை எடுக்க முடியுமே தவிர அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் இதுபோல்  முடிவு எடுக்க மாட்டார்கள்.

மத நிகழ்ச்சிகள் மூலம் வருவாய் ஈட்டுதல்

பெரியாரின் பெயரால் திடலை அமைத்து அதில் மண்டபமும் அமைத்து அதை வாடகைக்கு விட்டு பொருளீட்டி வருகிறார்கள் வீரமணி வகையறாக்கள்.

இவர்கள் எதை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த மதங்களின் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டு மதக் கருத்தைப் பரப்ப துணை நிற்கிறார்களே! இதில் வியாபாரம் - அதுவும் நெறி தவறிய வியாபாரம்தான் உள்ளதே தவிர பகுத்தறிவு ஏதும் இல்லை.

நாம்கூட பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடத்தி இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருக்கிறோம்.

எதைத் தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை ஒழிப்பதில்தான் பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளது.

காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுயமரியாதைக்கு உகந்த செயல் அல்ல.

விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டிலே வந்து அதைச் செய்துகொள் என்று கூறினால் அவன் சுயமரியாதை உள்ளவனா?

போலிப் பகுத்தறிவுவாதிகளை இன்னும் அம்பலப்படுத்திவிட்டு நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் தருவோம்.
தொடரும்...

0 comments: