Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்
Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Monday, 25 October 2010

நண்பரின் வெற்றிக்கு உதவுவோம்

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

Wednesday, 6 October 2010

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு உணர்வு பதிலடி

இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறும் போலி பகுத்தறிவுவாதிகளான தி.க. கட்சியினர் நடத்தும் "உண்மை' நாளேட்டிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஏடான "உணர்வு' வார இதழ் "போலி பகுத்தறிவுவாதிகளுடன் விவாதிக்க உணர்வு அறைகூவல் : உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 2008 முதல் மே 2009 வரை 21 தொடர்களாக வெளியிட்டது. 
இந்த தொடர் வெளி வந்து 3 மாதங்கள் கழித்து தி.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் சென்னையில் 2 நாள் நேரடி விவாதம் செய்து தங்களின் கொள்கையில் தோற்றுப்போய் ஓடி விட்டனர்.

Thursday, 30 September 2010

அறிவிப்பு

இத்தளம் இஸ்லாமியர்கள் மத்தியில் உள்ள இயக்க சிந்தனைகளை மாற்றி இம்மை மறுமை வெற்றிக்கு வழி ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டது . இதில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால் தவறு இருந்தால் திருத்தி கொள்கிறோம்.

Saturday, 11 September 2010

வாசகர்கள் கவனத்திற்கு :

நான் எப்போதும் யாரிடமும் வாழ்த்து சொல்வதில்லை. சிறு வயதில் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது யாருக்கும் வாழ்த்து கடிதமும் அனுப்புவதில்லை. பிறரை நாம் எப்படி வாழ்த்த முடியும். நாம் வாழ்த்தினால் அவர் நன்றாக இருந்து விடப் போகிறாரா?