Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Wednesday, 1 December 2010

வியாபாரமாகிப் போன கல்யாணம்

இங்கே நான் பதிவு செய்யப்போவது என்னை மிகவும் வெறுப்பூட்டிய நிகழ்ச்சி. என் நண்பன் இந்தப் பதிவை பார்க்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவனுக்கு கம்ப்யூட்டர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. இதற்கான நண்பன் என்னை மன்னிக்க வேண்டும். இருந்தாலும் அவனுக்கு ஒரு கண்டனத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன் (இங்கே அவனுடைய பெயர் சொல்ல விரும்பவில்லை) ஒருவன் இருக்கிறான். நாங்கள் 15 வருட கால நண்பர்கள். நான் சொல்வதை அவன் செய்வான். அவன் சொல்வதை நான் செய்வேன் அப்படி ஒரு நெருக்கம். (இங்கே தீய செயல்களைச் சொல்லவில்லை. நல்ல செயல்களையே கூறுகிறேன். அவன் சொல்வதை நான் மறுக்க மாட்டேன்; நான் சொல்வதை அவன் மறுக்க மாட்டான். அப்படி ஒரு நெருக்கம். காசுக்காக பழகும் நண்பர்கள் அல்ல நாங்கள்).

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன். என் நண்பன் கடந்த 4 வருட காலமாக என்னுடன் சரிவர தொடர்பு இல்லாமல் இருந்தான். எனக்குத் திருமணம் ஆகிவிட்ட பிறகு என்னுடன் பழகிய நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விலகி விட்டேன். என் நெருங்கிய நண்பனிடமும் சரிவர பழகாமல் போய் விட்டது. என் வாழ்க்கை. என்னுடைய வேலை அப்படி.

(என் நண்பன் 10 வருடங்களுக்கு முன்பு இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு குடும்பத்துடன் மாறிவன். அவர்கள் வீட்டில் வாரந்தோறும் மாலை நேரத்தில் பிரார்த்தனைகள் நடைபெறும். கிறிஸ்தவ மதத்தைப் பற்றியே எப்போதும் பேசுவார்கள். நானும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன்தான். கிறிஸ்தவ மதத்தில் இருந்த குப்பைகளை அறிந்து அந்த மதத்தை விட்டு விலகி விட்டேன்.

இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த பிறகு அதைப் பின்பற்றி வராவிட்டாலும் அந்த மார்க்கத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன். எனக்கு நாட்டத்தை ஏற்படுத்திய இறைவன் என் மனைவிக்கும் இஸ்லாம் மீது நாட்டத்தை ஏற்படுத்திட எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.)

இன்று காலை என் நண்பன் தனது தங்கைக்கு கல்யாணம் என்று பத்திரிகை ஒன்றை கொண்டு வந்து கொடுத்தான். நான் அதைப் பற்றி விசாரித்தேன். அவன் கூறியதைக் கேட்டதும் அதிர்ந்து விட்டேன்.

அவனுடைய குடும்பம் இந்த கிறிஸ்தவ கொள்கையில் கூட ஒழுங்காக இருக்கவில்லை என்பது அவனின் தங்கை கல்யாண முறையைப் பற்றி கேட்டதும், அவனை விளாசு விளாசென்று விளாசி விட்டேன். கோபத்தால்தான் இந்த பதிவைக் கூட எழுதுகிறேன்.

அவனுடைய தங்கைக்கு 4 வருடங்களாக மணமகன் தேடினார்களாம். இப்போதுதான் மணமகன் கிடைத்தானாம். அவர் பிரபல கல்லூரி துணைப் பேராசிரியராக மாதம் ரூ. 35 ஆயிரம் சம்பளம் வாங்கும் இந்து மணமகன். அவர் என் நண்பனுடைய சொந்தக்காரனாம். அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நமக்கென்ன. அது அவருடைய விருப்பம்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அதுவும் பெந்தோகோஸ் மதத்தைச் சேர்ந்த என் நண்பனின் குடும்பத்தினர் இந்து மதத்தைச் சேர்ந்த மணமகனைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து முடிக்கப் போகின்றனர். அதுவும் இந்து முறைப்படி.

இதைப் எப்படி அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏனென்றால் கிறிஸ்தவர்களுக்கு இந்து மதத்தைக் கண்டாலே பிடிக்காது. (இங்கு மதத்தைப் பற்றி விமர்சிக்கிறேன் என்று என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நண்பனின் குடும்பம் எப்படி பணத்திற்காக இவ்வாறு போய் விட்டனரே என்ன ஆதங்கத்தில் கூறுகிறேன்).

இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்த்தார்கள் சரி. இந்து முறைப்படி கல்யாணம் செய்கிறார்கள் சரி. இங்கு நாம் முக்கியமாக பேச வேண்டியது வரதட்சணைப் பற்றித்தான்.

ஆம்! நண்பனின் குடும்பம் அந்த மாப்பிள்ளைக்கு 5 சவரண் நகை, பெண்ணிற்கு 10 சவரண் நகை. கல்யாண ஏற்பாடு பெண் வீட்டாரின் பொறுப்பு. பத்திரிகை செலவு பெண் வீட்டார் பொறுப்பு. மாப்பிள்ளை மணியாட்டிக் கொண்டு வர வேண்டியதுதான். (இப்படியே துணிமணி, திண்ண சோறு எல்லாம் ரெடி பண்ணிக் கொடுத்திருக்கலாம்.)

மாதம் ரூ. 35 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு கல்லூரி துணைப் பேராசிரியருக்கு உலக நடப்பு என்ன என்று கூடத் தெரியவில்லை. (இங்கே அவர், ''நான் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவன்...'' என்று கூறினால் அவரை செருப்பால் அடிப்பேன்) இப்படி கல்வி படித்த, அடுத்தவருக்கு கல்வியைப் போதிக்கும் உயர்ந்த பதவியில் உள்ள இது மாதிரியான ஈனப் பிறவிகள் எப்போதுதான் திருந்தப் போகிறதோ?

பெண் வீட்டாரின் கல்யாணச் செலவு எவ்வளவு தெரியுமா? (தோராயமாக மதிப்பிடுவோம்)

பத்திரிகை செலவு - 1 பத்திரிகை (பிரிண்டிச் செலவு உள்பட) ரூ. 10.00 (300 பத்திரிகை ரூ. 3000)

மண்டப வாடகை ரூ. 20,000

நகை நட்டு - ஒரு பவுன் (செய்கூலி, சேதாரம் உள்பட) ரூ. 17,500 (தோராயமாக) - 15 பவுன் = ரூ. 2,62,500

இரண்டு சக்கர வண்டி வாங்கித் தருகிறார்களோ இல்லையோ அதைப் பற்றியெல்லாம் என் நண்பன் என்னிடம் கூறவில்லை.

பாத்திரங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்தப் பண்ட பாத்திரங்களின் மதிப்பு எனக்குத் தெரியாது. இருந்தாலும் தேராயமாக ஒரு மதிப்பைப் போடுவோம் - ரூ. 50,000

துணி, மணி (குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ரூ. 30,000)

மண்டபத்தில் வருபவர்களுக்கு சாப்பிட (இரண்டு நாளைக்கு) ஆகும் செலவு ரூ. 40,000.

இதர செலவுகள் ரூ. 20,000.

மொத்தச் செலவுகள் ரூ. 4,25,500 (நான்கு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநுறு ரூபாய்)

ரூ. 4 இலட்சம் செலவாகும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இது பெண் வீட்டாரின் செலவு.

மாப்பிள்ளை வீட்டாரின் செலவு ரூ. 0 (மாப்பிள்ளை வீட்டார் இதை நினைத்து வெட்கப் பட வேண்டும்)

ஏன்ன மாப்பிள்ளை வீட்டார்தான் எல்லாத்தையும் திருடிட்டுப் போறாங்களே...

இந்து மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் இப்படித்தான் இருக்கின்றன. தவ்ஹீத் கொள்கையை அறியாத சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் கூட இப்படி வரதட்சணைத் திருமணத்தில் மாட்டிக் கொண்டு மண்டையைச் சொறிந்து கொண்டிருக்கின்றனர். உண்மையான மார்க்கத்தை அறியாதவர்களின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

ஏக இறைவன் திருமணத்தை ஒரு ஒப்பந்தம் என்றுதான் கூறுகிறான். ஒப்பந்தம் சரிப்பட்டு வரவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம். அதுவும் மிகவும் சுலபமானது.

என்னுடைய நண்பனின் குடும்பம் நடுத்தர குடும்பம்தான். அவனின் அப்பா ஒரு கார்ப்பரேஷன் மருந்து தெளிப்பவர். அவரின் மாத வருமானம் ரூ. 12,000 தான் இருக்கும். (என் நண்பனுடைய அப்பாவும் என் அப்பாவும் பள்ளி நண்பர்கள்.) இவர் தன்னுடைய இரண்டாவது மகளுக்கு ரூ. 4 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறார். அவரிடம் அவ்வளவு பணம் இருக்காது. இருப்பினும் கடன் வாங்கித்தான் இந்த திருமணத்தை முடிப்பார். (அந்தக் கடன் பணத்தை திருப்பிச் செலுத்தும்போதுதான் பிரச்சினை வெடிக்கும் - இதைப் பற்றி உணராமல் இருக்கின்றனர்)

ஏன் இப்படி? இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் செய்யும்போது மணமகளுக்கு மணமகன் மஹர் எனும் கொடையைக் கொடுத்துவிட்டு மணமுடிக்க வேண்டும். முஸ்லிம்களில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மணமகளுக்கு மஹர் கொடுத்துதான் திருமணம் செய்ய வேண்டும். வரதட்சணை என்ற பேச்சிற்கே அங்கே இடம் இருக்கக் கூடாது. அப்போதுதான் அவர் நபி வழியை கடை பிடிக்கிறார் என்று அர்த்தம்.

நானும் என்னுடைய நண்பனிடம் மேற்கண்ட அனைத்து தகவல்களையும் சொல்லி அவனிடம் கடந்த 4 வருடங்கள் கழித்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசினேன். அவனும் நான் கூறிய அனைத்து விஷயத்தையும் சரி என்றுதான் கூறினான். ஒரு முறை கூட நான் சொல்வது தவறு என்று கூறவில்லை. அவனுக்கே தெரிகிறது அவனின் பெற்றோர் செய்வது தவறு என்று!

சகோதரர்களே சிந்திப்பீர்கள்! திருமணம் என்பது வியாபாரம் இல்லை. ஏதோ பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒருவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போதுகூட இந்த (பொருள்களைக் கொடுத்து திருமணம் செய்யும்) லாஜிக் ஒத்துவரும்.

ஆனால் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒருவருக்கு அவரை விலைக்கு வாங்குவதுபோல் பணம் கொடுத்து, நகை கொடுத்து, பெண் கொடுத்து திருமணம் செய்வது சுத்த வியாபாரமே தவிர இதில் சொல்லிக் கொள்ளும்படியாக வேறு ஒன்றும் இல்லை.

இஸ்லாம் உலகில் உள்ள அனைவருக்கும் நன்மையைத்தான் போதிக்கிறது. அனைவரும் இதை சரிவர புரிந்து கொண்டால் வாழ்வில் எப்போதும் ஒளிரலாம்.
இந்த விஷயத்தைப் பற்றி உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்...
- ஆர். மன்மதன்

0 comments: