அணுத் திமிர் காரணமாக உலகை மிரட்டி வரும் அமெரிக்கா இதுவரை கட்டி வைத்திருந்த கற்பனைக் கோட்டை ஒவ்வொன்றாக சரிந்து விழுந்து வருகிறது. தான் என்ன செய்தாலும் உலகில் யாரும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்ற ஆணவத்துக்கு மரண அடிகள் விழுந்து கொண்டே வருகின்றன.
ஒவ்வொரு நாடும் தனது கையிருப்பில் வைத்துள்ள தங்கத்தின் அளவுக்குத்தான் கரன்ஸிகள் அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்ற விதியில் இருந்து அமெரிக்கா தனக்கு விதி விலக்கு அளித்துக் கொண்டு இருந் தது. தேவைப்படும் அளவுக்கு டாலர்களை அச்சிட்டுக் கொண்டு பணக்கார நாடு என்று பம்மாத்து காட்டி வந்தது. யூரோவின் ஆதிக்கத்தாலும் வங்கிகளின் பேராசையாலும் இன்று அமெரிக்கா பொருளாதாரத்தில் நாள்தோறும் இறங்கு முகத்தைச் சந்தித்து வருகிறது. உலகப் பணக்கார நாடு என்ற இனிமேல் சொல்க் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
அமெரிக்கா செய்தி அட்டுழியங்களை ஆதாரத்துடன் காட்டும் ஜுலியன் அசான்ஜன் |
அமெரிக்காவுக்குள் ஈ, எறும்பு கூட நுழைந்து எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அந்த அளவுக்கு கட்டுக்கோப்பான பாதுகாப்பு தனக்கு உள்ளது என்றும் அமெரிக்கா படம் காட்டி வந்தது.
உலக வர்த்தக மையத்தின் மீதும், பென் டகன் மீதும் செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் இந்த மாயையை உடைத்துப் போட்டு விட்டது. சாட்டிலைட் மூலம் பூமியில் நடமாடும் எருமை மாட்டைக்கூட நாங்கள் கண்காணிக்க முடியும் என்ற இறுமாப்புக்கு செப்டம்பர் 11 அன்று சாவு மணி அடிக்கப்பட்டது. இராணுவம், உளவுத்துறை, சாட்டிலைட்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் படுதோல்வியைச் சந்தித்தன.
பயங்கர ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்பது மட்டும்தான் உண்மையே தவிர, எருமை மாட்டையும் தப்பவிட மாட்டோம் என்பதெல்லாம் மாய்மாலம் என்பது உறுதியானது. "எங்களுக்கு நிகரான இராணுவம் உலகில் கிடையாது; இரண்டு வல்லரசுகள் இருந்த காலத்தில் வியட்நாமில் நாங்கள் தோற்றிருக்கலாம். மற்றொரு வல்லரசான சோவியத் யூனியன் மறைமுக உதவியால்தான் வியட்நாமில் மூக்குடைபட்டோம். இப்போது உலகில் ஒரே வல்லரசு நாங்களே! நாங்கள் எந்த நாட்டில் நுழைந்தாலும் அதை வெற்றி கொள்வோம்...'' என்று இறுமாப்புடன் ஆப்கானிலும், இராக்கிலும் அமெரிக்கா படைகளைக் குவித்தது. முதுகெலும்பு இல்லாத உலக நாடுகள் பலவற்றையும் துணைக்கு அழைத்துக் கொண்டது.
ஆனால் இராக்கில் விழும் மரண அடியால் நிலை குலைந்து, போட்டது போட்டபடி பின் வாங்கி ஓட்டம் பிடித்து வருகிறது. ஆப்கானிலும் விரைவில் வெளியேறுவோம் என்று அறிவிக்கும் நிலைமை ஏற்பட்டுள் ளது.
இராக்கையும், ஆப்கானையும் தனது காலனி நாடாக வைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் திட்டம் படுதோல்வியில் முடிந்துள்ளது. இவற்றையெல்லாம் விழுங்கிச் சாப்பிடும் வகையில் அமெரிக்காவில் பாதுகாப்புத் துறையில் ஓஸோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை விட பெரிய ஓட்டை விழுந்துள்ளது.
இரகசியங்களை அதிகம் காப்பாற்றும் நாடு எனும் பெருமை பெற்றது என்ற பெயரும், பென்டகனில் இருந்து ஒரு குண்டூசியைக் கூட யாராலும் எடுத்துப்போக முடியாது என்ற போலிச் சித்திரமும் இப்போது கரைந்து விட்டது. ஆம்! விக்கி லீக்ஸ் இணைய தளம் இராக்கிலும், ஆப்கானிலும் நடத்திய ஒவ்வொரு அக்கிரமத்தையும் அதற்காக பென்டகனில் தீட்டப்பட்ட திட்டங்களையும் இது குறித்த அனைத்து ஆவணங்களையும் அப்படியே வெளியிட்டு அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பென்டகனில் உள்ளவர்கள் வழியாக தவிர வேறு எந்த வழியிலும் இந்த ஆவ ணங்கள் வெளியே வந்திருக்க முடியாது. பென்டகனில் உள்ளவர்களே வெறுக்கும் அளவுக்கு அமெரிக்காவின் அடாவடித்தனம் அமைந்துள்ளதால் தான் இது வெளியே வந்திருக்க வேண்டும்.
இராக், ஆப்கான் மட்டுமின்றி அமெரிக் காவின் நடப்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா செய்த சதிச் செயல்கள், நம்ப வைத்து கழுத்தறுக்க தீட்டிய திட்டங்கள் என 30 லட்சம் ஆவணங்களை விரைவில் வெளியிடப் போவதாக விக்கி லீக்ஸ் இணைய தளம் அறிவித்துள்ளது. அமெரிக்கா மிரண்டு போனாலும் அவற்றை வெளியிடக் கூடாது என்று விக்கி லீக்ஸ் இணைய தளத்தை மிரட்டியுள்ளது. இந்த மிரட்டலுக்கு விக்கி லீக்ஸ் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் ஏமாற்றப்பட்டதுவரை உலகின் பல நாடுகளை அமெரிக்கா கழுத்தறுத்த உண்மைகள் வெளிவர உள்ளன. அமெரிக்காவுடன் ஒப்பிட முடியாத நமது நாட்டில் கூட எதிரி நாட்டவருடன் சாதாரண தொலைபேசி உரையாடல் நடத்தி யவர்கள் உடனே கண்டு பிடிக்கப்படுகிறார் கள். ஒரே ஒரு பேக்ஸ் மூலம் இரகசியத்தை காட்டிக் கொடுத்தவர்களும் உடனே கண்டு பிடிக்கப்படுகிறார்கள். ஆனால் அமெரிக்காவின் கோடிக்கணக் கான பக்கங்களைக் கொண்ட 30 லட்சம் இரகசிய ஆவணங்கள் அமெரிக்க அரசுக்கு தெரியாமல் ஒரு இணைய தளத்துக்குள் கிடைக்கிறது என்றால் அது செப்டம்பர் 11ஐ விட மிகப் பெரிய மரண அடியாகும். அமெரிக்காவின் அத்தனை இராணுவ ரகசியங்களும் பல நாடுகள் கையில் கிடைத் திருக்கும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். உலகிலேயே மிகவும் பலவீனமான நாடு என்பதுதான் இன்றைக்கும் அமெரிக்காவின் நிலை. இந்த நிலை மேலும் நீடித்தால் உலகத்துக்கு நல்லதுதான்.
0 comments:
Post a Comment