Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Saturday, 11 September 2010

வாசகர்கள் கவனத்திற்கு :

நான் எப்போதும் யாரிடமும் வாழ்த்து சொல்வதில்லை. சிறு வயதில் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது யாருக்கும் வாழ்த்து கடிதமும் அனுப்புவதில்லை. பிறரை நாம் எப்படி வாழ்த்த முடியும். நாம் வாழ்த்தினால் அவர் நன்றாக இருந்து விடப் போகிறாரா?

அது இறைவன் செய்யும் காரியம். இறைவன் நம்மை வாழ்த்தினால்தான் நாம் நலமாக இருக்க முடியும். நாம் வாழ்த்தினால் அது நாம் இறைவனிடம் போட்டி போட்டதுபோல் ஆகிவிடும். இறைவனின் சக்தியைவிட மிகப் பெரிய சக்தி இல்லை. ஆகவே நான் யாரிடமும் வாழ்த்து சொல்வதில்லை.

இஸ்லாமியர் சிலர் வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். இதை தவறாக நினைப்பவன் நான். ஈத் முபாரக் என்று கூறக் கூடாது. 'குறிப்பிட்ட இந்த நன்னாளில் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்' என்றுதான் கூற வேண்டும். வாழ்த்து என்பது இஸ்லாத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்.

0 comments: