Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Tuesday 21 September, 2010

தாம்பரத்தில் உலவும் பேய் பீதி

சமீபத்தில் சென்னை தாம்பரம் பகுதியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால் தாம்பரம் ரயில்வே ஊழியர்களும், தாம்பரம் பகுதி வாசிகளும் தண்டவாளத்தில் ஒரு பூஜை செய்தனர். இந்த பூஜை எதற்கென்றால் இங்கு ஆவிகள் உலவுவதாகவும், அதனால் பலர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் அடிபட்டு இறந்து விடுகின்றனர் என்பதாலும் இந்த பூஜை செய்தால் அங்கு உலவிக் கொண்டிருக்கும் இறந்தவர்களின் ஆவி அந்த இடத்தை விட்டு போய் விடும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டது.


இது குறித்து நேற்று இரவு (20-09-2010) 10.30 மணிக்கு சன் டி.வி.யில் நிஜம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. பகுத்தறிவின் குடேன் என்று சொல்க் கொள்ளும் இவர்கள் (சன் டி.வி.) கூட மக்களிடம் பேய் பீதியை ஏற்படுத்தும் விதமாக இநத் நிகழ்ச்சியை ஒளிபரப்பினர்.
ஏற்கெனவே பீதியில் இருக்கும் அப்பகுதி மக்கள் இந்த பூஜையினால் மேலும் பீதியடைந்துள்ளனர். ஒவ்வொரு நேரமும் இந்த தண்டவாளத்தை கடக்கும்போது என்ன நேருமே என்ற அச்சமுடன் கடக்கின்றனர்

ரயில்வே துறையைப் பொறுத்தவரை தண்டவாளத்தைக் கடப்பது சட்டப்படி குற்றமாகும்இப்படி தண்டவாளத்தை கடப்பவர்களை பிடித்து ரூ. 200ருந்து ரூ. 400வரை அபராதம் போடுகின்றனர். அபராதம் போட்டாலும் பரவாயில்லை. காலையிருந்து மாலை வரை பிடித்தவர்களை அடைத்து வைத்து அவர்கள் ஜென்மத்திற்கும் இதுபோல் செய்யாமருக்கும் வகையில் செய்து விடுகின்றனர்.

அப்படி இருந்தும் பலர் இவ்வாறு தண்டவாளத்தை கடப்பதால் அங்கு பல மரணங்கள் ஏற்படுகின்றன. இதற்கு ஒரே தீர்வு அங்கு மேம்பாலம் அமைப்பதுதான். மேம்பாலம் அமைப்பதற்கு எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் இவ்வாறு பூஜை செய்தால் அங்கிருக்கும் பேய் ஓடி விடும் என்பது முட்டாள்தனம். இதை ரயில்வே ஊழியர்களே செய்திருப்பது ஆச்சர்யத்தைத் தந்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பூஜை செய்ததெல்லாம் உண்மைதான். சனிக்கிழமை (18-09-2010) அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் ரயில்வே ஊழியர்கள் சிலர் பூஜை செய்தனர். அவர்களுடன் சேர்ந்து இங்கு யாரும் தண்டவாளம் கடக்கும்போது ரயில் அடிபட்டு மரணமடைந்து விடக்கூடாது என்பதற்காகவும் அப்பகுதி மக்கள் பேயை விரட்டும் பூஜை செய்தனர். இதை எங்களால் தடுக்க முடியவில்லை...'' இவ்வாறு கூறினார்.

தாம்பரம் பகுதிவாசி ஒருவர் கூறும்போது, "என்னென்னே தெரியங்க. ரொம்ப நாளா இங்கே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்ல அடிபட்டு பலபேர் இறந்து போறாங்க. நான் கூட ஒருமுறை தண்டவாளத்தைக் கடக்கும்போது யாரே பிடித்து இழுப்பதுபோல் தெரிந்தது. நான் உடனே சுதாரித்துக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்து ஓட விட்டேன்... இங்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 150 பேர் இப்படி ரயில்ல அடிபட்டு இறந்து போயிருக்கங்க... என்று கூறினார்.

இந்துக்களைப் பொறுத்தவரை இப்படி பேய், பிசாசு, பில், சூனியம், மந்திரம், தந்திரம் போன்றவற்றை நம்புவதால்தான் இப்படி தேவையில்லாமல் அறிவைப் பயன்படுத்தாமல் பூஜை, புனஸ்காரம் போன்றவற்றை செய்கின்றனர்

பொதுவாக நாம் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் நம்மீது மோதுமாறு வந்தால் அந்த வாகனத்தை ஓட்டி வரும் ஓட்டுனர் உடனே பிரேக் பிடித்தால் அது சில அடி தூரம் வந்து நின்று விடும். ஆனால் ரயிலைப் பொறுத்தவரை பிரேக் போட்டால் பல அடி தூரம் சென்றுதான் நிற்கும்.

இதைக் கூட சரியாக விளங்காமல் நம் மக்கள் ரயில் வரும் நேரத்தில் உடனே கடந்து விடுகிறேன் என்று நினைத்து ரயில் மாட்டிக் கொண்டு இறந்து விடுகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்திருந்து நாள்தோறும் பல வெளியூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பொறுத்தவரை சாதாரண ரயின் வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிகம்

குறிப்பாக இந்த ரயில்கள் செல்லும் தண்டவாளம் சாலையை ஒட்டி இருப்பதால் இதைக் கடக்க நினைக்கும் பலர் இவ்வாறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் மாட்டி இறந்து விடுகின்றனர்.

ரயில் பிரேக் போட்டால் உடனே ரயில் நிற்காது என்ற சாதாரண அறிவைக் கூட ரயில்வே நிர்வாகம் அறிந்திருந்தும் இது பற்றி ஒழுங்கான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் பொது மக்களிடம் பேய், பிசாசு இந்தப் பகுதியில் அலைகிறது என்று யாரே ஒருவர் கிளப்பி விட்ட பீதியை நம்பி பூஜை செய்தது கண்டிக்கத்தக்கது.

ரயில்வே நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனே தலையிட்டு ரயில் தண்டவாளத்தை யாரும் கடக்கக் கூடாது என்று சரியான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இங்கு மேம்பாலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால் தாம்பரம் ரயில்வே நிலையம் மட்டுமில்லாமல் எந்தப் பகுதி ரயில்வே நிலையமாக இருந்தாலும் அங்கு பேய் உலவுகிறது என்ற பீதி இருக்காது.

0 comments: