Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Wednesday 1 September, 2010

தீவிரவாதத்தைப் பற்றி பேச இவர்களுக்குத் தகுதியில்லை

லகில் பரந்து விருந்து கிடக்கும் தீவிரவாதத்திற்கு ஆணி வேரே அமெரிக்காதான் என்று உலக மக்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படி இருக்க "இரானில் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கப் போகிறேன்; ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை ஒடுக்கப் போகிறேன் என்று இந்த அண்ட வந்த பிடாரி (அமெரிக்கா) கொக்கரித்துக் கொண்டிருக்கிறது.
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம் இந்திய திருநாட்டை இவர்கள் ஆட்சி செய்தபோது நம் இந்திய மக்கள் கடுமையாக இவர்களை எதிர் கொண்டனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரும் வெள்ளையனை ஒழிக்க படாத பாடுபட்டனர். இதில் குறிப்பாக முஸ்லிம்களின் பங்கு அதிகமாக இருந்தது.
.. சிதம்பரனாருக்கு கப்பல் வாங்க அப்போதே ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தவர் பக்கீர் முஹம்மது என்ற முஸ்லிம் ஆவார். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல் நம் இஸ்லாமிய நண்பர்கள் இந்திய சுதந்திரத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளனர்.
உதாரணத்திற்கு நான் ஒன்றைச் சொல்கிறேன் இதை சரியா என்பதை நீங்கள் யோசியுங்கள்.
நீங்கள் ஒரு சொந்த வீட்டில் குடி கொண்டிருக்கிறீர்கள். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் உங்கள் வீட்டை ஆட்டையைப் போட நினைக்கிறான். அவன் உங்களின் நண்பனாக இருந்தாலும் கூட நீங்கள் என்ன செய்வீர்கள். "டாய் இது நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கின வீடு. இதை ஆட்டையைப் போட உனக்கு எப்படிடா மனம் வந்தது...'' என்று நாம் கேட்போம்.
அவன் நம் நண்பனாக இருந்தாலும் கூட நம்முடைய பொருளை நம்மிடம் கேட்காமல் சொந்தம் கொண்டாடினால் அதனை நாம் கண்டிக்கிறோம்.
இப்படி இருக்கும்போது இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒருவன் இந்த நாட்டில் தீவிரவாதம் பெருகிக் கொண்டிருக்கிறது; தீவிரவாதத்தை உடனே ஒழிக்க வேண்டும் என்று டேரா போட்டுக் கொண்டு யாரிடம் வந்து நாட்டாமை செலுத்துவது.
எனவேதான் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய தேசங்கள் சுதந்திர தாகம் கொண்டு அமெரிக்கர்களை எதிர் கொள்கின்றனர்.
ஒருவன் நம்முடைய சொத்தை கொள்ளையடிக்கிறான் என்றால் அதை நாம் காப்பாற்ற போராடுவது தீவிரவாதமா? அப்படியென்றால் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பெருந் தலைவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா? இப்படி நல்லோர்கள் கேட்கின்றனர்.
தன்னுடைய நாடு எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகக் கூடாது என்று அணு ஆயுதங்களையும், நவீன ரக போர்க் கருவிகளையும் வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தீவிரவாத நாடு என்று மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
உலக நாட்டையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணிய அமெரிக்கா உலகில் உள்ள பல நாடுகளின் இராணுவ ரகசியங்களைத் தெரிந்து வைத்துள்ளது. இதனால்தான் நம்முடைய நாட்டிற்கும் அண்டை நாடான சீனா, பாகிஸ்தான் போன்ற நாட்டிற்கும் உள்ள எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ தளவாடங்களை நன்கு அறிந்து வைத்துள்ளது.
இதெல்லாம் எதற்காகத் தெரியுமா? (உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் சொல்கிறேன்) இப்படி எல்லைப் பிரச்சினையை அண்டை நாடுகளிடையே கிளப்பி இராணுவ ஆயுதங்களை விற்று அதன் மூலம் வல்லரசு நாடாக தொடர்வதே இதன் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதிதான் சமீபத்தில் இந்தியாவுக்கு அமெரிக்க விடுத்த எச்சரிக்கை மணி, சீனா தன்னுடைய இராணுவத்தை இந்திய எல்லைப் பகுதியை நோக்கி நிலை நிறுத்தியுள்ளது என்று புரளியைக் கிளப்பி இந்திய மக்களின் வயிற்றில் புலியைக் கரைத்தது. இதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவை நோக்கி இராணுவத்தை நிலை நிறுத்தி உள்ளது என்றும் பல எச்சரிக்கை குண்டுகளையும் இந்தியாவின் தலையில் போட்டது.
உடனே நமது பாரதப் பிரதமர், ஒபாமாவின் தலையாட்டி மன்மோகன் சிங்கும் அமெரிக்கா கூறும் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டு சுயமாக யோசிக்காமல் நமது இராணுவ வீரர்களையும் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தத் துவங்கினார்.
ஆக மொத்தத்தில் உலகத்தில் தீவிரவாதத்தை வளர்த்து அதன் மூலம் தன் நாட்டை மிகப் பெரிய வல்லரசாக மாற்ற அமெரிக்க நினைக்கிறது.
அமெரிக்க எதனால் இப்படி செய்கிறது தெரியுமா? கடந்த சில வருடங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் சரிவு நிலையைக் கண்டு வருகிறது. அங்குள்ள ஒவ்வொரு வங்கியும் தினமும் திவால் நோட்டீஸ்களை அள்ளி வழங்கி வருகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக 15 அமெரிக்க வங்கிகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இப்படி நடந்து கொண்டிருக்க, "அதெல்லாம் ஒன்றும் இல்லை அமெரிக்கா நல்ல நிலையில்தான் இருக்கிறது...'' என்று புருடா விடுகிறார் அமெரிக்க மக்களால் வெறுக்கப்படும் ஒபாமா.
இராக் 7 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த அமெரிக்கா சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் 50,000 படைகளை அங்கே நிலை நிறுத்தி உள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.
கடந்த வாரம் (19-08-2010) அன்று சில ஆயிரம் இராணுவ வீரர்களை மட்டும் வாபஸ் பெற்றுக் கொண்ட அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று ஒபாமா கூறினார்.
கிழிச்சாங்க... வீரன் பலபேரை எதிர் கொள்வான். கோழையோ ஒருவனைக் கூட எதிர் கொள்ள முடியாது என்பதற்கு இது நல்ல சான்று. இரான், ஆப்கானிஸ்தான் போராளிகளை எதிர்கொள்ள முடியாமல்தான் இவர்கள் பின்வாங்குவது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அமெரிக்க வீரர்களால் தாக்கு பிடிக்கவே முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த படை வாபஸ்.
சமீபத்தில் விக்கி லீக் என்ற இணைய தளம் ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளில் அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ள இராணுவ ரகசியங்களை வெளியிட்டது. உடனே குய்யோ முறையோ என் கத்திய அமெரிக்கா விக்கி லீக் இணைய தளத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
"போடா வெண்ணை நீ என்னடா சொல்றது... நான் என்னடா செய்யுறது...'' என்று அலட்சியப்படுத்திய விக்கி லீக் இணைய தளம் அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களையும், அமெரிக்கா பல்வேறு நாடுகளில் உருவாக்கி உள்ள ஒற்றன் பட்டியலையும், அதன் சூழ்ச்சியையும் வெட்ட வெளிச்சமாக்கியது.
"என்னடா இது... மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம்போல் இருக்கிறதே...'' என்று அமெரிக்கா இப்போது மண்டையையும், கையையும் சொரிந்து கொண்டு என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படித்தானே மற்றவர்களுக்கும் இருந்திருக்கும். "தனக்கு வந்தா அது ஆபத்து; மத்தவனுக்கு வந்தா அது பாதுகாப்பா? என்னங்கடா உங்க நியதி' என்று உலக மக்கள் அமெரிக்காவின் தந்திரங்கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு தீவிரவாதத்தைப் பற்றி பேச துளியும் தகுதியில்லை என்பதை உலக மக்கள் அறிவார்கள்.
உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். எனவேதான் நம் இந்தியா நாட்டிற்கென்று  ஒன்று வந்து விட்டால் வாரிக்கொடுக்கும் வள்ளல்களாக நம் நாட்டின் மக்கள் இருந்து வருகின்றனர்.
தீவிரவாதத்தை உள்நாட்டிலும் நடந்தாலும் சரி, வெளி நாடு மூலமாக நடந்தாலும் சரி இதை யாரும் ஆதரிக்கக் கூடாது. தீவிரவாதத்தை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் தகுதி நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்திற்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது.
அதேபோல் தீவிரவாதம் உருவாகாமல் இருக்க நாட்டின் தலைவர்களும் ஏழை எளிய மக்களுக்கு நல்ல உதவிகளையும், சலுகைகளையும் வாரி வாரி வழங்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்போம்! நாட்டு மக்களை காப்போம்!!
- ரா. மன்மதன்


சிந்திக்க வைக்கும் கார்ட்டூன்




0 comments: