கடந்த வாரம் தமிழகத்தில் அனைவரின் மனதிலும் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளிச் சிறுவர்கள் கடத்தி கொல் லப்பட்ட செய்தி. கோவையைச் சேர்ந்த முஸ்கான், ரித்திக் என்ற சகோதர சகோதரிகளை வேன் டிரை வர் ஒருவர் கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்தவுடன் அந்த மாணவர்களை விட்டு விடாமல் கொன்றுபோட்டது
கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக அமைந்தது. (இது குறித்த விரிவான செய்தியை கலைஞர் தொலைக்காட்சியில் காண முடிந்தது.)சமீப காலமாக தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்தவண்ணமே உள்ளது. என்னதான் நமது காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் இதுபோன்ற குற்றச் செயல்கள் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
குற்றவாளிகள் புதிது புதிதாக உருவாவதற்கு பொருளாதாரமும், விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற பேராசையும்தான் மிக முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி பேராசைப்பட்டால் நாடு நாசமாகி விடும்.
உழைத்துதான் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்பட்டால் நமது நாடு மிக விரைவில் வல்லரசாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரரின் மகனை கடத்தி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ரூ. 4 கோடிவரை பேரம் பேசப்பட்டு முடிவில் ரூ. 1 கோடி கொடுக்கப்ப ட்டது.
மாணவனை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பணம் கொடுத்த பின்னர் அவர்களை மடக்கி பிடித்தும் விட்டனர்.
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கமிஷனர் அவர்கள் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில் கூறாமல் மழுப்பலான பதிலையே கூறினார்.
இதுவரைக்கும் நமக்கு சந்தோஷம்தான். ஏன் என்றால் இதுவே வேறொரு மாநிலமாக இருந்திருந்தால் சுத்த சொதப்பலாக்கி மாணவர்களை பிணமாகத்தான் மீட்டிருப்பார்கள். காவல்துறை பணி என்பது மிகவும் கஷ்டமானது என்பதை அதில் பணி புரிபவர்களுக்குத்தான் தெரியும். டென்ஷன், டென்ஷன், டென்ஷன்தான்.
என்னடா இவன் காவல்துறைக்கு சாதகமாக பேசுகிறான் என்று நினைத்து விட வேண்டாம். நமக்கு ஒரு சிறிய பிரச்சினை என்றாலே டென்ஷனாகி விடுவோம். பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்கும் அவர்களின் நோக்கில் நாம் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.
தமிழக கல்வித்துறை இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும், அவர்களை பள்ளிக்கு கொண்டு செல்லும் டிரைவர்களுக்கும் 13 அறிவுரைகளை வழங்கி உள்ளது.
ஒரு பிரச்சினை ஏற்படும்போதுதான் அதுகுறித்த அறிவே நமக்கு வருகிறது என்பது இந்த சம்பவங்களின் முலம் நிரூபணமாகியுள்ளது.
என்ன இருந்தாலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவர்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேர்வார்களா என்ற பதைபதைப்பை இந்தச் சம்பவங்கள் பெற்றோர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டது.
நல்லோர்கள் பலர் பள்ளி மாணவர்களை கடத்திக் கொலை செய்த இந்த இரண்டுபேரை துக்கில் போட்டுக் கொல்ல வேண்டும் என்றும், அரபு நாடுகளில் உள்ள சட்டம்போல் நடு ரோட்டில் வைத்து நாயை அடிப்பதுபோல் கல்லால் எறிந்து அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இப்படி செய்தால்தான் தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவர் மனதிலும் ஏற்படாது என்று இஸ்லாமிய சட்ட முறையை நினைவு படுத்துகின்றனர்.
தமிழக அரசு இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகுதான் மாணவர்களுக்கென தனி பேருந்துகள் விட்டிருக்கிறது. தினமும் பேருந்துகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கெட்டில் தொங்கியபடி பயணிப்பதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்க மாணவர்களுக்கென தனிப் பேருந்துகள் விட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதுபோல் நிறைய பேருந்துகள் தமிழகம் முழுவதும் ஏழை மாணவர்களுக்கென்று விட்டால் ஏழைகளின் மனம் குளிரும்.
தள்ளுவண்டியிலும், தெரு ஓரமாகவும் டிபன் கடை, சாப்பாடு கடை போட்டு பிழைப்பவர்களை நாம் தினமும் சில இடங்களில் பார்ப்போம். இப்படித்தான் உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்கு இவர்கள்தான் எடுத்துக்காட்டு. அதிகம் ஆசைப்படக் கூடாது. உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஏற்பட்டால் நாட்டில் குற்றங்கள் வெகுவாக் குறையும் என்பதை நான் திரும்பவும் நினைவூட்டுகிறேன்.
0 comments:
Post a Comment