தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள், கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக பெரிய அளவில் எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அயராது உழைத்து கொண்டிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
கல்வி வளர்சி பணிகள்.
1. கல்வி கற்பதும் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை வாங்குவதும் எளிதானதே, இதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கும் விதமாக அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றோம், மிக குறுகிய காலத்தில் தமிழகத்தில் 116 இடங்களில் 200 மேற்பட்ட கல்வி கருத்தரங்குகளை நடத்தி உள்ளோம், தமிழ முஸ்லீம்களுக்காக மட்டும் அல்லாமல் கர்நாடகா மாநிலத்திலும் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.
2. மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்காலாம் ? என்று அனைத்து சமுதாய மாணவ மாணவியரும் பயன்படும் வகையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்வி கருத்தரங்கங்களை நடத்தி வருகின்றோம்.
3 . ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரே நேரத்தில் கல்வி வழிகாட்ட கண்காட்சிகளை நடத்தில் அதில் ஒவ்வொறு படிப்பிற்க்கும் தனி பிரிவுகள் அமைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுகின்றோம்.
4. நல்ல கல்லூரியில் சேர அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும், அதற்க்காக தேர்வுக்கு முன்னர் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை நடத்தி தேர்வு எழுதும் நுணுக்கங்களை மாணவ மாணவியருக்கு கற்று கொடுக்கின்றோம்.
5. வேலை வாய்ப்பு பெற ஆங்கில மொழித்திறமை அவசியம், அதற்க்காக ஆங்கில பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகின்றோம்.
6. ஏழை மாணவர்களுக்கும் கணினி அறிவை மேம்படுத்த இலவசமாக கம்ப்யூட்டர் சாப்ட் வேர் ஹார்ட்வேர் வகுப்புகள் நடத்தி வருகின்றோம்.
7. கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரங்களிலும், பொது கூட்டங்களிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
8. சமுதாய மாணவர்கள் வேலை வாய்ப்பு தகவல் அறிந்து கொள்ள உள்நாடு வெளிநாட்டில் வேலை உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை திரட்டி அனைவருக்கும் e-mail மூலமாக தெரிவிக்கின்றோம். (நீங்களும் வேலை வாய்ப்பு தகவல் பெற tntjjob@gmail.com என்ற e-mail முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்).
9. வேலைவாய்ப்பு பெற நடைபெறும் நேர்முக தேர்வில் எவ்வாறு பதில் என்று மாணவர்களுக்கு " நேர்முக தேர்வு பயிற்சி முகாம்" நடத்திவருகின்றோம்.
10. உயர் கல்வி நிறுவனக்கள் உயர்சாதியினருக்கே என்ற நிலைமையை மாற்றி IIT, IIM, IISc, NIT, AIMS போன்ற உயர் கல்வி நிறுவங்கள் நடத்தும் நுழைவு தேர்வு பற்றிய தகவல்களை திரட்டி முஸ்லீம்களும் உயர் கல்வி நிறுவங்களில் படிப்பதற்க்கான ஊக்கமும், வழிகாட்டுதலும், பயிற்சியும் இலவசமாக அளித்து வருகின்றோம்.
11. குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க வேண்டும், மாணவ மாணவியரின் கல்வி மேன்பாட்டில் பெற்றோர்களின் பெரும் பங்கை விளக்கி பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.
12. மத்திய மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவி தொகையை முஸ்லீம் மாணவ மாணவியருக்கு பெற்று கொடுக்கும் வகையில் அரசிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம்.
13. ஏழை மாணவ மாணவியருக்கு உதவும் வண்ணமாக இலவச நோட்டு புத்தகமும், எங்களால் இயன்ற கல்வி உதவியும் செய்து வருகின்றோம்
சமுதாய பணிகள்
1. முஸ்லீம்களுக்கு எதிரான பத்திரிக்கைதுறை பயங்கரவாதத்தை தடுக்க நமது சமுதாய மாணவர்களும் பத்திரிக்கை துறையில் நுழைந்து சாதனை புறிய TNTJ இளம் பத்திரிக்கையாளர் பாசறையை ஏற்படுத்தி முஸ்லீம் மாணவர்க்ளுக்கு பத்திரிக்கை துறை சம்மத்தமாக பயிற்சி அளித்து வருகின்றோம்.
2. சமுதாய இளைஞர்களிடையே உள்ள வரதட்சணை மோகத்திற்க்கு எதிராக இளைஞர்களிடம் வரதட்சணையால் ஏற்படும் தீமைகளை விளக்கி வரதட்சணைக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்து வருகின்றோம்
3. இளைஞர்கள் மது, சிகெரெட் போன்ற போதை பழக்கத்திற்க்கு அடிமையாகமல் தடுக்க மாணவர்களிடம் மது சிகெரெட் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய்மைகளை விளக்கி போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
4. நமது சமுதாய மாணவியர்களை காதல் என்ற போர்வையில் காவி கயவர்களிடம் சிக்காமல் தடுக்க மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இதை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றோம். காதல் என்ற பெயரில் நடக்கும் சமூக சீர்கேட்டிற்க்கு எதிராகவும் காதலர் தினத்தில் நடக்கும் அனாச்சாரங்களுக்கு எதிராகவும், காதலர் தின எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றோம்.
இஸ்லாமிய பணிகள்
1. முஸ்லீம்களின் இளைய சமுதாயம் ஷிர்க் பித்-அத் கொள்கையில் வீழ்ந்துவிடாமல் தடுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏகத்துவ பிரசாரங்களை மேற்கொண்டுள்ளோம், தனி நபர் தாவா மூலமும், துண்டு பிரசூரங்கள் மூலமும் ஏகத்துவ அழைப்பு பணியை இளைஞர்கள் மத்தியில் முடுக்கிவிட்டுள்ளோம்.
2. மாணவர்கள் இஸ்லாத்தை முழுவதும்மாக அறிந்த்து கொள்ள ஒழுக்க பயிற்ச்சி முகாம் (தர்பியா) நடத்தி வருகின்றோம்.
3. மாற்று மத மாணவர்களின் இஸ்லாத்தை பற்றிய சந்தேகத்தை போக்கி இஸ்லாத்தின் பால் அவர்களை அழைக்கும் வண்ணம் "மாற்று மத மாணவர்களுக்கான கேள்வி-பதில்" நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம்
4. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களை கொண்டு முஸ்லீம் மாணவர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றோம்.
5. கல்லூரிகளில் ஜும்மா பயான் நிகழ்த்துவது, மாணவர் விடுதிகளில் (Hostels) இஸ்லாமிய பயான்கள் நிகழ்த்துவது போன்ற தாவா பணிகளை செய்து வருகின்றோம்.
6 . SMS மூலம் கல்வி செய்திகள் குர் ஆன் ஹதீஸ்கள் பரப்பி வருகின்றோம்
இணையதள பணிகள்
1. இணையதளத்தில் கல்வி வளர்ச்சி பணிகளையும் இஸ்லாமிய பணிகளையும் ஆற்ற www.tntjsw.blogspot.com என்ற இணையத்தை (வலை பூ) நிறுவி உள்ளோம். இதில் கல்வி பற்றிய தகவல்கள், குர் ஆன் ஹதீஸ்களையும் தொகுத்து வழங்கி உள்ளோம்.
2. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள், மற்றும் சிறந்த இஸ்லாமிய கட்டுரைகளை e-mail மூலமாக அனுப்பி வருகின்றோம். (மாணவரணியின் e-mail list-ல் சேர tntjedu@gmail.com என்ற e-mail முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்)
அன்பு சகோதர சகோதரிகளே! மாணவரனியின் அனைத்து பணிகளும் கடைக்கோடி முஸ்லீம்களுக்கும் சென்று அடைய வேண்டும் என்பதுதான் மாணவரணியின் லட்சியம், இதற்க்காக மாணவரணி சகோதரர்கள் கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்த அளப்பெரிய பணி சில நபர்களால் மட்டும் செய்து முடித்துவிட முடியாது, நாம் அனைவரும் முயன்றால் தான் உங்களுடை பிள்ளைகள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்ற முடியும் இன்ஷா அல்லாஹ், இதற்க்கு நீங்களும் உழைக்க வேண்டும். மாணவரணி ஒரே இடத்தில் சேவைகளை செய்யாமல் மாநிலம் முழுவதும் செய்து வருகின்றது, நீங்கள் நடந்து வரும் தூரத்திலோ அல்லது ஒரு மணி நேர பிரயான தூரத்திலோதன் பெரும்பாலான மாணவரணியின் நிகழ்ச்சிகள் நடக்கின்றது. சமுதாய முன்னேற்றத்திற்க்காக இலவசமாக நடத்தப்படும் மாணவரணி நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவியரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு தெரிந்த சகோதர சகோதரிகளையும் அழைத்து வரவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
சமுதாயத்திடம் இருந்து எந்த பலனையும் எதிர்பாராமல் மாணவரணி சகோதரர்கள் தங்கள் படிப்பிற்க்கும் வேலைக்கும் மத்தியிலே இந்த கல்வி சேவையை செய்து வருகின்றனர். நமது சகோதரர்கள் இந்த கல்வி சேவையை சிறப்பாக தொடர்ந்து செய்யவும், மாணவரணி சகோதரர்களுக்கு அல்லாஹ் பொருளாதாரத்தை அதிகபடுத்தி கொடுக்கவும், நல்ல உடல் ஆரோகியத்துடனும் , தூய இஸ்லாத்தை அறிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து மறுமையில் சுவனத்தை அடைவதற்க்கு அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கேட்டுக்கொள்கின்றோம்.
- S. சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி
0 comments:
Post a Comment