நாடும் நடப்பும்
அப்படியா சேதி
என்ன நண்பர்களே! குழந்தைங்களுக்கு வெகேசன் ஆச்சே? எங்கேயும் போகலையா? என்றவாறே பாலா அன்றைய உரையாடலை துவக்கினார்.
போகலாம்னு தான் பிளான் பண்ணியிருந்தோம். ஆனால் அடிக்கிற வெயிலில் எங்கே போறதுன்னு நினைச்சுகிட்டு இருந்தப்போ புயல்சின்னம் இருக்கு எச்சரிக்கை செஞ்சாங்க. அதோட மழை வந்திடுச்சு. அதான் எங்கேயும் போகலை என்று பீட்டர் கூறினார்.
ஆமாம்பா! சில இடங்களில் மழையும் லைலா புயலும் ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு. அதற்கிடையில் ஜோசியக்காரனுங்க, சுனாமி வரப்போகுதுன்னு பீதியை கிளப்பி விட்டுட்டானுங்க. கன்னி ராசியில் சனி இருந்தால் கடல் வத்தி போகும், சுனாமி வரும், பெரிய அழிவு ஏற்படும்னு கதை கட்டி விட ஆரம்பிச்சுட்டானுங்க. அதைக் கேட்டு மக்கள் பயந்துட்டாங்க. ஆனால் அப்படி எதுவுமே நடக்கலை. இனியாவது இந்த ஜோசியக்காரனுங்க பேச்சை மக்கள் கேட்காம இருக்கணும் என்று ஃபாரூக் கூற,
இதெல்லாம் அவங்க வருமானத்திற்காக செய்யுற வழின்னு மக்கள் தெரிஞ்சுக்கணும். அதுக்காக நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம நடத்தணும் என்றார் பீட்டர்.
அதைத்தான் நானும் சொல்ல வந்தேன் என்ற பெரியார் பிரியன்,
ஸ்கூல் லீவு விட்டதால் குழந்தைங்களை கூட்டிக்கிட்டு பிர்லா கோளரங்கம் போயிருந்தேன். விடுமுறையை மாணவர்கள் ரொம்ப பயனுள்ளதாக கழிக்கணும்னு அவங்க அறிவியல் புரோகிராம் ஒண்ணு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. ரொம்ப நல்ல புரோகிராம் அது. பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றும் செயல்களை மாணவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கோவிலில் தீ சட்டி தூக்குறது, தீ மிதிக்கிறது எல்லாத்தையும் நம்மாலும் செய்ய முடியும். அது அறிவியல் தானே தவிர அற்புதமோ, அதிசயமோ இல்லைன்று சொல்லி மாணவ மாணவிகளை வச்சு செஞ்சு காட்டினாங்க. அதை பார்த்த நம்ம பசங்க, ப்பு... இவ்வளவு தானா? தீ மிதிக்கிறதெல்லாம் பெரிய அற்புதம்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம் ஆனால் அது சாதாரண மேட்டர் தானா! ன்னு கேக்குறாங்க.
நம்மால விளக்கி சொல்ல முடியாத செயல்களை அவங்க செஞ்சு காட்டினது மாணவர்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அது அற்புதம் இல்லை, அதை எல்லோராலும் செய்ய முடியும்ங்கிறது இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் தெரிஞ்சுக்க முடிஞ்சுதுன்னு சொன்னாங்கன்னா பார்த்துக்கங்களேன் என்றார் பெரியார் பிரியன்.
இந்த மூட நம்பிக்கைகள் வளர பேப்பர்காரங்க தான் காரணம். அவங்க தான் இதை பெரிய விஷயமா காட்டுறாங்க. பாருங்க.. அன்னைக்கு கூட ஒரு செய்தியை பார்த்தேன். சபரி மலை செல்ல விரதம் இருக்கும் யானைன்னு செய்தி போட்டிருந்தாங்க. அந்த யானைக்கு சாப்பாடு போடாம பட்டினி போட்டுட்டு அது விரதம் இருக்குதுன்னு கதை கட்டுறாங்க. உக்ரைன் நாட்டுல செஞ்ச மாதிரி ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணினா தான் சரியாக வரும் என்றார் பாலா.
அவங்க என்ன பண்ணினாங்கன்னு தான் சொல்லுங்களேன் என பீட்டர் கேட்க,
உக்ரைன் நாட்டிலுள்ள பேப்பர்காரங்க போடுகிற செய்தி சரியில்லைன்னு மக்கள், பேப்பரை கழுவுகிற போராட்டத்தை நடத்தினார்கள் என்றார் பாலா.
அதே போராட்டத்தை நாமும் பண்ணிடவேண்டியது தான் என்ற ஃபாரூக், சமீபத்தில் ஒரு செய்தி படிச்சேன். மார்பில் வெடிகுண்டு – அல்கைதா புது டெக்னிக்குன்னு போட்டிருந்தாங்க. பெண்கள் தங்களுடைய மார்பை அறுவை சிகிட்சை செஞ்சு நீக்கிட்டு அதுக்கு பதிலாக வெடிகுண்டு திரவப்பையை பொருத்திக்கிறாங்களாம். இயல்பாகவே மார்பில் திரவபொருள் இருப்பதால் விமான நிலைய ஸ்கேனிங்கில் கண்டு பிடிக்க முடியாதாம். அது போல ஆண்கள் தங்களுடைய பின்புறத்தில்(அமரும் பகுதியில்) திரவ பொருளை நிரப்பி வெடிக்க முயற்சிக்கிறாங்களாம். முஸ்லிம்களுக்கு எதிராக என்னடா எழுதலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல... எப்படிப்பட்ட அயோக்கியத்தனமாக வார்த்தைகளை எழுதி இருக்காங்க பார்த்தீங்களா? உளவுதுறையும் சரி பேப்பர்காரனும் சரி சரியான லூசுங்களா இருப்பானுங்க போல.. என்று சற்று கோபமாகவே குறிப்பிட்டார் ஃபாரூக்.
நீங்க லூசுன்னு சொல்றீங்க ஆனா அவங்களோ முஸ்லிம்கள் அத்தனை கொடுமையானவர்கள் என்பதை பரப்பத்தான் இப்படி சொல்றாங்க என்ற பெரியார் பிரியன், அவங்க கிட்ட ஆதிக்கமும் மீடியாவும் இருக்கிறதால அது எடுபடவும் செய்யுது என்றார்.
இஸ்லாத்தை அழிக்கிறதுக்காக அவங்க திட்டம் போடுறாங்க. அதில் ஒருவகை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இன்னொரு வகை என்ன தெரியுமா? என ஃபாரூக் கேட்க,
என்ன அது? என பாலா கேட்டார்.
ஆபாசத்தின் பக்கம் முஸ்லிம்களை அழைப்பது தான் அது என கூறிய ஃபாரூக், விளக்கமளிக்க துவங்கினார்.
ஆடை சுதந்திரம், தனிநபர் சுதந்திரம்னு சொல்லி பெண்களை வீதிக்கு கொண்டு வர்றது தான் அது. அதில் ஒன்று தான், இந்த ஃபேஷன் ஷோ, அழகி பட்டம் எல்லாம். ஒருத்தருக்கு பட்டம் கொடுத்துட்டா மற்ற பெண்களும் அதற்கு தயாராவார்கள், அதன் மூலமா ஒரு பண்பாட்டையே மாத்திடலாம்கிறது மேற்கத்திய நாடுகளின் ஃபார்முலா. அந்த ஃபார்முலாவை பயன்படுத்தி தான் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைக்கணும்னு திட்டம் போட்டு இந்திய பெண்களுக்கு மிஸ் வேர்ல்டு, மிஸ் யூனிவர்ஸ் பட்டம் கொடுத்தாங்க. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். இன்னிக்கு பேஷன் ஷோ, மாடலிங், அழகிப் போட்டிகள் எல்லாத்தையும் நமது இந்திய பெண்கள் பெருமையா கருத ஆரம்பிச்சுட்டாங்க.
இப்போ முஸ்லிம் பொண்ணுக்கு மிஸ் யு,எஸ்.ஏ பட்டம் கொடுத்திருக்காங்க. அமெரிக்காவில் வசிக்கும் லெபனானை சார்ந்த ரிமா என்கிற ஒரு பொண்ணுக்கு மிஸ் அமெரிக்கா பட்டம் கொடுத்திருக்காங்க. அவர்களுடைய நோக்கம் புரியாமல் அதை சில விபரம் புரியாதவங்க முஸ்லிம்களுக்கு கிடைச்ச பெருமையா கூட சொல்றாங்க. ஆனால் எப்போ ஒரு பொண்ணு அடுத்தவன் முன்னால தன்னோட அவயங்களை காண்பிச்சிட்டாளோ அப்பவே அவ இஸ்லாத்தில் இருந்து விலகிடறா. இப்போ பட்டம் வாங்கி இருக்காளே ரிமா, அந்த பொண்ணு பல வருஷங்களாகவே பார்களில் ஆபாச நடனம் ஆடக்கூடியவள். அவளுக்கு டிரஸ் உடுக்கறதுன்னாலே அலர்ஜி. ஆபாசமா டிரஸ் போட்டுகிட்டு கண்டவனையெல்லாம் கட்டி புடிச்சிட்டு திரியறா! இவளை போய் முஸ்லிகளுக்கு மாடலாக நினைக்க முடியுமா? அவளை செலக்ஷன் பண்ணின டீமின் நோக்கம், இப்படியெல்லாம் முஸ்லிம் பெண்கள் மோசமாக நடக்கணும், அப்போ தான் நாங்க பட்டம், பதவி தருவோம்னு சொல்லாம சொல்றாங்க என்ற ஃபாரூக், ஒரு பெரிய தத்துவத்தை சொல்லிவிட்டது போல் நண்பர்களை பார்க்க,
சரி! நாம் அடுத்த வாரம் விரிவாக பேசலாம்! ஸ்கூல் திறக்குறதுக்கு நாள் ஆகிடுச்சு! பிள்ளைங்களுக்கு புக்ஸ் வாங்கணும். அதனால் இப்போ கிளம்பலாம் என பாலா கூற நண்பர்களும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
நல்ல விஷயங்களை சொன்னா ஏத்துக்க மாட்டீங்களே! என்ற ஃபாரூக், மக்கள் குறைகளை தீர்க்க வேண்டிய முதல்வர், அதை செய்யாமல் சினிமா நடிகைகளுக்கு விழா எடுக்குறதையும் அரசு செலவில் சினிமா சூட்டிங் பார்க்க போறதையும் பேசினால் ரொம்ப குதூகலமாக கேட்பீங்க. எல்லாம் காலத்தின் கோலம் என முனகிக் கொண்டே ஃபாரூக்கும் அந்த இடத்தை காலி செய்தார்.
- மாஹீன்
- மாஹீன்
0 comments:
Post a Comment