Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday, 5 August 2010

திருநங்கை என்ற பெயரில் சமூகத் துரோகிகள்.

திருநங்கை என்ற பெயரில் சமூகத் துரோகிகள். 
தொடா் (02)
தொகுப்பு : Rasmin M.I.Sc 
 
அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானதா?

அரவாணிகளை எதிர்ப்பது மனிதநேயத்திற்கு எதிரானது என்று இன்றைக்கு சில தன்னார்வக் குழுக்கள் குரல் கொடுக்கின்றன.

இவர்கள் இப்படி குரல் கொடுப்பது சமுதாய சிந்தனையுள்ளவர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது.

இயற்கைக்கு மாற்றமாக செய்ற்கை முறையில் தன்னை பெண்ணாக காட்ட முயலும் இவர்கள் சுய லாபத்திற்காக உழைக்காமல் கையேந்தி சாப்பிடுவதற்காக இப்படி செய்யும் போது சமுதாய நலனை விரும்பும் எந்தவொருவரும் அவர்களை எதிர்க்க வேண்டுமே தவிர அவர்களை ஆதரிப்பது எந்த விதத்திலும் சரியானதாக அமையாது.

அத்தோடு ஓரினச் சேர்க்கை போன்ற மிகப் பெரும் சமூகக் கொடுமையை அரங்கேற்றும் இவர்களை ஆதரித்தால் அவர்களை நாம் எந்த பட்டியலில் சேர்ப்பது?

இஸ்லாமிய தீர்ப்பு என்ன?

அரவாணிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இவர்களைப் பற்றி இஸ்லாம் அழகான மிகத் தெளிவான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.

உலகில் ஏற்படும் அணைத்துப் பிரச்சினைகளுக்கும் அழகாக எந்த மார்க்கமும் சொல்லாத வகையில் தீர்பை சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் என்பது உலகறிந்த உண்மை.

இந்த தூய இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது.
இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப் பட முடியாதவர்கள்.

உலகில் ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இருக்கிறது. இதை தவிர செயற்கை பாலினமாக மாற முனையும் இவர்களை ஒருக்காலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.

திருக்குர்ஆன் பார்வையில் இரண்டு பாலினம் மாத்திரமே!

உலகில் இரண்டு பாலினம் மாத்திரமே உள்ளது என்பதை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்(4:1)

மேற்கண்ட வசனத்தில் ஆதம்(அலை)மூலம் அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.என்று குறிப்பிடுவதிலிருந்து உலகில் ஆண் பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிற வேறு பாலினம் இல்லை என்பது உள்ளங் கையில் நெல்லிக் கணி போல் தெளிவான விஷயம்.

அரவாணிகள் பற்றி நபியவர்களின் வார்த்தை.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி' (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால் அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள்.    (புஹாரி 4324)

அரவாணிகள் என்று தங்களை அழைக்கும் இவர்கள் ஆண்கள் என்பதால் தான் நபியவர்கள் அவர்களை பெண்கள் இருக்கும் இடத்திற்கே வர விடக்கூடாது என்று தடுக்கிறார்கள்.

இவர்கள் பெண்களிடம் தங்களை பெண்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய அங்க அவயவங்களை நோட்டமிடும் கீழ்தரமான காரியங்களை செய்பவர்கள் அதனால் இவர்கள் ஒரு போதும் பெண்களுடன் தொடர்பு வைக்க அனுமதிக்கக் கூடாது என்பது நபியவர்களின் தெளிவான வார்த்தை.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும் அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்! என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள். (புஹாரி 6834)
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இவர்கள் நபியவர்களின் சாபத்திற்கு உரியவர்கள்.

அதாவது ஆண்களைப் போல் நடக்கும் பெண்களையும் பெண்களைப் போல் நடக்கும் ஆண்களையும் நபியவர்கள் சபிக்கிறார்கள்.

இந்த அரவாணிகள் என்று சொல்லப் படுபவர்கள் ஆண்கள் ஆனால் பெண்களைப் போல் தங்களை அடையாளப் படுத்துகிறார்கள்.

மொத்தத்தில் இவர்கள் இறைவனி சாபத்திற்கு உரியவர்கள் என்பதால் அரவாணிகள் விஷயத்தில் நாம் கவணமாக இருக்க வேண்டும் அவர்களை ஆண்களாகத் தான் நாம் முடிவெடுக்க வேண்டும் அவர்களுடன் நமது பெண்கள் (அரவாணிகளை பெண்களாக நினைத்து)பழகுவதை தடுக்க வேண்டும்.

மொத்தத்தில் அரவாணிகளை நாம் வீடுகளிலேயே வைக்கக் கூடாது அவர்கள் தங்களை ஆண்கள் என்று பகிரங்கமாக அறிவித்து ஆணுடைய தோற்றத்தில் இருந்தால் நாமும் அவர்களை ஆண்களாக ஏற்றுக் கொள்ள முடியும் மாறாக தன்னை ஒர அரவாணியாக எவர் காட்டிக் கொள்கிறாரோ அவருக்கு நமது வீட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது என்பது இஸ்;லாத்தின் தெளிவான நிலைபாடு.

- நன்றி : Rasmin M.I.S.C

0 comments: